பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

கம்பன் சுயசரிதம்

உணர்த்தியபோது தக்கது தகாதது இன்ன இன்னது என்று உணராதே தாழ்ந்தனர் என்பான்.

புக்க அவளொடும் காமப்
    பதுமணமது வின்தேறல்
ஒக்க உண்டிருந்த வோரும்
    உணர்ந்தனள் உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஒராள்
    தாழ்ந்தனள் இருப்பதாழா
முக்கனான் அனைய ஆற்றல்
    முனிவனும் முருகி வந்தார்

என்பதே கம்பன் பாட்டு. இப்படியே நெடுகிலும் பெண்மை நலம் பழுதுபடா வகையில் காவியம் எழுதிய கம்பன் தாரையை கைம்மைக் கோலத்தில் வந்தவளாக உருவாக்கிக் காட்டுவது வியப்பல்ல தானே.

❖❖❖