பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

127

அப்போதுதான் தீவிரமாகப் படித்தார்கள். கம்பன் யார்? என்று இனம் கண்டுபிடித்தார்கள்.

கம்பன் பாடல்களை அவர்கள் படிக்கிறது என்றால், அதற்கு நேரம், காலம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. தனியே இருந்து படிப்பார்கள். காண வந்திருக்கும் நண்பரை உடன் வைத்துக்கொண்டு படிப்பார்கள், பல நண்பர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு படிப்பார்கள். அப்படி அவர்கள் உடன் இருந்து அவர்கள் படிப்பதைக் கேட்டவர்கள், அப்படியே அவர்களிடம் பாடம் கேட்டவர்கள்தான் வட்டத்தொட்டி அங்கத்தினர்கள்.

1924 ம் வருஷம் ஆம் முப்பது வருஷத்திற்கு முன்பே இலக்கிய சங்கம் கூடிற்று திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் டிகேசி அவர்கள் வீட்டில், பல நண்பர்கள், எல்லோரும் ஆங்கிலம் கற்றவர்கள்தான் இலக்கிய சங்கத்தின் அங்கத்தினர்கள். அவர்களை உடன் வைத்துக் கொண்டு கம்பனைப் படித்தார்கள். டிகேசி கம்பன் திருநாள் நடத்தினார்கள். (கம்பனுக்குத் திருநாள் நடத்த வேண்டும் என்று முதல் முதல் திட்டமிட்டவர்கள் அவர்கள்தானே) அதன் பின் சென்னை சென்றார்கள். இந்துமத அறநிலையக் காப்பாளராக இருந்துவிட்டு ஊர் திரும்பியபின், இதே இலக்கிய சங்கம் திரும்பவும் கூடிற்று டிகேசி அவர்கள் வீட்டில். மூன்று நான்கு பேரோடு ஆரம்பித்த கூட்டம் வாரா வாரம் பெருகிக்கொண்டே போயிற்று. முப்பது நாற்பது பேர் இந்த வட்டத்தொட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்வது என்பது வழக்கமாகிவிட்டது. இந்த வட்டத்தொட்டியில் இருந்துதான் டிகேசி அயோத்தியா காண்டம் ஆரண்ய காண்டம் முழுவதையும் முறையாகப் படித்தார்கள். மற்றவர்களுக்கும் பாடம் சொன்னார்கள்.

டிகேசி கம்பன் பாடல்களைப் படித்தார்கள். ஆனால் அதை மற்றவர்களுக்குப் படித்துக் காட்டவில்லை பாடிக்-