பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

131

சொல்லால் விவரிக்க முடியாத உணர்ச்சிகளை உருவாக்கும் கவிதையின் சொல்லழகு, சந்த அழகு எல்லாம் மெல்ல மெல்லத் தோன்றும். ஏன், கவிதையே அந்தக் கவிதையைப் பாடிய கம்பனே தன்னை விளக்கிக் கொள்வதாகத் தோன்றும். உயர்ந்த கவிதை எப்படித் தெளிவாக இருக்குமோ அப்படியே டிகேசியின் பேச்சும் இருக்கும். எளிமையான நடையிலே பேச்சு, ஆனால் இதயத்தைத் தொட்டுத் தொட்டுப் பேசும் பேச்சு. பேச்சின் மூலம், பேச்சில் வரும் விளக்கங்கள் உதாரணங்கள் மூலம் கம்பன் கவிதையின் உண்மையான வடிவம் எழும் நம் இதயத்துள்ளே. அவர் செய்வதெல்லாம் பேச்சின் மூலம்தான். பெரிய மாயாஜாலமாக இருக்கும்.

ஒருநாள் ஆங்கிலப் பேராசிரியர் டிகேசி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு கம்பராமாயணம் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அவர் “என்ன சார் கம்பன் கவியே கவி என்றெல்லாம் சொல்லி வருகிறீர்கள். உங்கள் கம்பன் எளிமையாக இல்லையே” என்று கேட்டுவிட்டார். அவ்வளவுதான். எளிமை என்ன என்பதை விளக்க முனைந்துவிட்டார்கள் டிகேசி. விளக்கம் என்றால் ஏதோ வின்னியாசமாக, வெறும் சொல்லால் விளக்கும் விளக்கம் இல்லை.

வேதியர் தமைத் தொழும்
வேந்தரைத் தொழும்
தாதியர் தமைத் தொழும்
தன்னையே தான்தொழும்
ஏதும்ஒன்ற உணர்வு உறாது
இருக்கும் நிற்குமால்
காதல் என்பதுவும் ஓர்
கள்ளின் தோற்றிற்றே

என்ற பாடலை இரண்டு மூன்று தடவை மடக்கி மடக்கிப் பாடினார்கள். நந்திக் கிராமத்தில் இருக்கிறான் பரதன். ராமன்