பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

கம்பன் சுயசரிதம்

தெரிந்தகொள்ள வேண்டும் என்றால் நேருக்குநேர் இருந்து நான் சொல்வதை, பாடுவதைக் கேட்க வேண்டுமே ஒழிய எழுதுவதைப் படித்துப் புரிந்துகொண்டார் என்பதெல்லாம் சவுடால்த்தனம் என்பதே. இதனாலேதான் பல வருஷ காலம் கம்பன் கவிதையைப் பற்றி எழுதவில்லை. ஏதோ ஆண்டுக்கொரு முறை, ஆனந்தவிகடன், கல்வி, கலைமகள் போன்ற பத்திரிக்கைளில் ஆண்டு மலர்களுக்கு எழுதுவார்கள். ரேடியோவில் ஒன்றிரண்டு பேச்சுக்கள் பேசுவார்கள். அதுவும் ஒரு பாட்டு இரண்டு பாட்டிற்குத்தான் விளக்கம் பெறுவோம் நாம். அதையே வாசகர்களால் ஆம் அச்செழுத்தில் படிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்பது அவர்கள் எண்ணம். பின்னர் பலருடைய வற்புறுத்தலுக்கு இணங்கித்தான் கம்பர் தரும் காட்சியைத் தொடர்ந்து கல்கியில் எழுதினார்கள். எழுதினார்கள் என்றால் கம்பனை நமக்கு அறிமுகம் செய்து வைத்து அவனையே நம்மிடம் நேரே பேசச் செய்தார்கள். அதற்குத் தகுந்தாற்போல விளக்கம் கொடுத்தார்கள். தங்கள் தங்கள் புலமையையும் கலையறிவையும் வெளிப்படுத்துவதையே முக்கியமாக வைத்து கம்பன் பாடல்களை எடுத்துச் சொல்லும் மற்ற வியாக்கியான கர்த்தர்களைப் போல் அவர்கள் எழுதுவதில்லை. கம்பன் பாடல்களை விளக்கும்போது மூடியிருக்கும் திரையை விலக்கிவிட்டுத் தான் ஒதுங்கி நின்று காட்சிகளையெல்லாம் நம்மை நேராக அனுபவிக்க விட்டுவிடுவார்கள். அதுவே அவர்கள் விளக்கங்களின் வெற்றிக்குக் காரணம்.

டிகேசி கம்பனைப் படித்தார்கள், அவன் காவியத்தைப் பற்றிப் பேசினார்கள், எழுதினார்கள் என்பதோடு டிகேசியின் சேவை நின்றுவிடவில்லை. டிகேசி கம்பனுக்குச் செய்த சேவைகளில் எல்லாம் சிறந்த சேவை, அவன் காவியத்தில் உள்ள செருகு கவிகளைக் கண்டுபிடித்து, அவைகளைத் துணிந்து களைந்ததுதான். கம்பராமாயணத்தில் செருகு கவிகள் உண்டென்பதையோ, அவைகளை அகற்ற