பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

கம்பன் சுயசரிதம்

போடுகிறாள். சுமித்திரை பேச்சு இரண்டு மூன்று பாடல்களில் இருக்கிறது. அதில் ஒரு பாட்டு

ஆகாதென்றால், உனக்கு
    அவ்வனம் அயோத்தி
மாகாதல் இராமன் நம்
    மன்னவன் வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம்
    பூங்குழல் சீதை என்றே
ஏகாய், இனி இவ்வயின்
    நிற்றலும் ஏதம்.

இந்தப் பாடலை, இராமன் மணிமுடி துறந்து காட்டுக்குப் புறப்படும்போது இலக்குவன் பேசுகிறானே அந்தப் பேச்சோடு, பாடல்களோடுதான் ஒப்பிட்டுச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன பாட்டு.

செல்லும் சொல்வல்லான் எதிர்
    தம்பியும், தெவ்வர் தூற்றும்
சொல்லும் சுமந்தேன், இரு
    தோள் எனச் சோம்பி ஓங்கும்
கல்லும் சுமந்தேன், கணைப்
    புட்டிலும் கட்டமைந்த
வில்லும் சுமக்கப் பிறந்தேன்
    வெகுண்டென்னை? என்றான்

இதைச் சொல்லிவிட்டு, கவிக்கு ஓர் உருவம் உண்டு. அந்த உருவத்துக்குப் பொருத்தமான அவயவங்களும் உண்டு. வார்த்தையும் தொனியும் கவி உருவத்துக்கு ஒத்துவரவேண்டும். எதுகை மோனைகள் உணர்ச்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் உறுப்புகளாய் இருக்க வேண்டும். உணர்ச்சி அம்சங்களுக்கும் பாவத்துக்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருந்தியவைகளாய்த் தொழில் செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் கவிக்கு உருவம் உண்டென்று சொல்லக்கூடும். செல்லும்