பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

கம்பன் சுயசரிதம்


பூண்டிருந்தல் இயல்பே. ஆனால் கங்கைக் கரையில் இருக்கும் வேடுவர் தலைவனும் கிஷ்கிந்தை நகரிலே வசிக்கும் வானர வீரனாகிய சுக்ரீவனும் ஏன் அரக்கர் கோனாய் விளங்கிய விபீஷணனுமே இராமனால் ஆகர்ஷிக்கப்படுகிறார்களே. அவனோடு அண்டி அவனுடன் சகோதர உறவு கொண்டாடி உலக சகோதரத்துவத்திற்கே அடிகோலுகிறார்களே. காவிய நாயகனோடு நாயகர்களாக ஒன்றிச் சேர்ந்து காவியத்தில் பிரதான அங்கம் பெற்று விடுகிறார்கள். இதெல்லாம் என்னவென்றால் எல்லாம் கம்பனுடைய காவியரசனைத் திறம்தான் என்று பதில் சொல்லத் தோன்றுகிறது. எத்தனை எத்தனையோ துக்கடாப் பேர் வழிகளை, சம்பவங்களை எல்லாம் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய கம்பீரமான காவியமாளிகையையே அல்லவா உருவாக்கிவிடுகிறான். அவன் கொஞ்சம் நுழையலாம். கம்பீரமாக எழுந்து நிற்கும் இக்காவியமாளிகையிலேதான் என்னென்ன அதிசயங்கள் எவ்வளவு எவ்வளவு விஸ்தாரமான மண்டபங்கள் - அறைகள் விதானத்திலும் சுவரிலும் செய்திருக்கும் நகாஸ் வேலைகள்தான் எவ்வளவு அழகையும் சோபையையும் கொடுக்கின்றன. பெரும்பெரும் கற்பாறைகளை அப்படி அப்படியே பேர்த்தெடுத்து அதையும் அப்படி அப்படியே வைத்துக்கட்டிய வான்மீகரது கதாமாளிகை எங்கே, அந்த மாளிகையின் அஸ்திவாரத்தின் மேலே பழைய மாளிகையைத் தட்டி நொறுக்கி விட்டு சிற்றுளியின் நயமெல்லாம் தெரியும்படி வல்லவன் ஆக்கிய சிற்பம் போல் அழகுணர்ச்சியெல்லாம் நிறைந்து நிற்கும் கம்பன் காவிய மாளிகை எங்கே? (By the ide of the valmigi massive, if at time gorgeons fise, Kamban construction stands like. Pleasure done of classical beauty and finished perfection). இந்தக் கம்பீரமான காவிய நிர்மாணத்திலே சில்லறை அலங்காரங்களையும் கம்பன் மறந்துவிடவில்லை. (He conceived like a tika and finished like a jeweller) சுருங்கச் சொன்னால் கம்பனுடைய காவியம்