பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கம்பன் சுயசரிதம்


வைத்திருப்பானேன்? அதிலே தானே அவருடைய சூது இருக்கிறது என்றெல்லாம் தூபம் போட்டான். அந்த மரத்தின் கனியை உண்டு தனக்கும் வருங்கால சந்ததியருக்கும் பாப மூட்டையைக் கட்டிக் கொடுக்கத் தயாராகிவிட்டாள் ஏவாள். எல்லாம் சாத்தானின் சாகசப் பேச்சில் மயங்கித்தான். ஏவாள் அந்த மரத்தை அணுகி பழத்தைக் கொய்கிறாள். அவளுடைய செய்கையால் உலகமே துன்பத்தில் உழல இருக்கிறது. ஒரு பெரிய உத்பாதமே நிகழ இருக்கிறதல்லவா? இயற்கை இந்தச் செயலை அறிந்து துடிக்கிறது. இதை வர்ணிக்கிறார் மில்டன்.

Earth felt the wound
And nature from her seat
signinp though all her works
Gave signs of woe
That all was lost.

என்பது மில்டன் கூறுவதாகும். பூமாதேவியின் இதயமே புண்பட்டுவிட்டது. இந்தக் காரியத்தால் இயற்கை தன்னுடைய ஒவ்வொரு செய்கையாலும் பெருமூச்செறிகிறாள். ஐயோ எல்லாம் பாழாகிவிட்டதே என்று அங்கலாய்க்கிறாள் என்று மில்டன் கூறும்போது, ஏது ஹோமர் சொல்லிய கருத்துகளின் எதிரொலி போலல்லவா இருக்கிறது இது என்று தோன்றுகிறது நமக்கு.

சரி மேலைநாட்டினர் தாம் அவர் தம் இலக்கியங்களில் இப்படியெல்லாம் சொல்லக்கூடும் என்றில்லை. கீழை நாட்டுக் கவிஞர்கள் இலக்கிய கர்த்தர்கள் இதே விஷயத்தை எப்படி எப்படி எல்லாம் சொல்லுவார்கள். சொல்ல முற்படுவார்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா.