பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கம்பன் சுயசரிதம்

என்றே முடிப்பான். அவன் அழியா அழகினை அழியாக் காவியத்திலேயே நிலைநிறுத்திவிடுகிறான் கம்பன். அந்த அழகை ஆராதனை பண்ணிப் பண்ணியே காவியம் வளர்கிறது, விரிகிறது. உயர்கிறது என்று சொன்னால் அது மிகையே அல்ல.

விற்பெரும் தடந்தோள் வீரன் - ராமன்

தமிழர்களது வீரம் பிரசித்தமானது. இன்றைய தமிழர்களை, நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி நிற்கும் தமிழர்களைச் சொல்லவில்லை. பழைய சங்க காலத்திய தமிழர்களைத் தான் சொல்கிறேன். சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் வீரப் பிரதாபங்களும் மெய்க் கீர்த்திகளுமோ அனந்தம். இந்த அரசர் பெருமக்கள் எல்லாம் எப்படிச் சிறந்த வீரர்கள் ஆனார்கள்? நல்ல வீரர்களைத் தங்கள் படை வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும் வைத்திருந்ததினாலே அல்லவா? பரணி பாடிய ஜயங்கொண்டார் நமக்கு ஒரு வீர மனைவியை, அவள் மூலமாக ஒரு வீரபுருஷனையே நமக்கு அறிமுகப்படுத்துகிறார். போருக்குச் சென்ற தலைவன் போரில் விழுந்துவிடுகிறான். அவனது உடலைத் தேடி ஓடுகிறாள் மனைவி. அவள் எதைத் தேடுகிறாள்?

பொருதடக்கை வாள் எங்கே?
   மணிமார்பு எங்கே?
போர்முகத்தில் எவர் வரினும்
   புறங்கொடாத பருவயிரத்
தோள் எங்கே? எங்கே?
?

என்று கேட்டுக்கொண்டே ஓடும் வீரப்பெண்ணை நினைக்கும்போது, அவள் புருஷன் எத்தனை வீரனாக இருக்க வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. வீர மனைவியை மாத்திரமா பார்க்கிறோம் வீரத் தாயாரையுமே பார்க்கிறோம் போர்க்களங்களில். நரம்பு எழுந்து உலறிய பழுத்த கிழவி