பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

69

சொல்லிச் சொல்லி மகிழ்கிறார் விஸ்வாமித்திரர். சீதையின் தந்தையாய ஜனகனிடத்து ராமனை அறிமுகப்படுத்தும் போது,

அலைஉருவக் கடல் உருவத்து
   ஆண்தகைதன் நீண்டு உயர்ந்த
நிலை உருவப் புயவலியை
   நீஉருவ நோக்கு ஐயா!
உலைஉருவக் கனல உமிழ்கண்
   தாடகைதன் உரம்உருவி
மலைஉருவி, மரம்உருவி
   மண்உருவிற்று ஒருவாளி

என்று எவ்வளவு கம்பீரமாகப் பெருமிதத்தோடு சொல்கிறார்.

சீதையை மணக்க நிபந்தனையாக அமைந்த அந்த அரனது வில்லை, எடுத்ததைப் பார்த்தனர் கூடி இருந்தவர், பின்னர் அது இற்றதையே கேட்டனர். எத்தனையோ வீரர்களால் அசைக்கவே முடியாத அந்த வில், இராமன் எடுத்து நாணேற்றுவதற்குள்ளே ஒடிந்தே விடுகிறது என்றால் எவ்வளவு வலியுடையவனாக அவன் இருந்திருக்க வேண்டும்? இது மட்டுந்தானா? பரசுராமன் ஏந்தி வந்த அந்த நாரணன் வலியன் ஆண்ட அந்த வெற்றி வில்லையுமே வளைத்து இதற்கு இலக்கம் தருக என்று பரசுராமனிடத்திலேயே கேட்க வேண்டும் என்றால் எவ்வளவு வீரனாக வாழ்ந்திருக்க வேண்டும். இந்த வீரம் அவன் கைகளில் மாத்திரம்தானா இருக்கிறது, அவன் நெஞ்சிலுமேதான் இருக்கிறது. இந்த வீரமே தண்டகாரண்யத்திலும், பின்னர் இலங்கையில் நடந்த போரிலும் துணைநின்று வெற்றியை ராமனுக்குத் தேடித் தந்திருக்கிறது.

பஞ்சவடியிலே நடக்கிறது ஒரு போர். அந்தப் போரிலோ, கரன் தூடணன் திரிசிரா என்ற வீரர்களை எல்லாம் ‘வில்லொன்றால் கடிகை மூன்றில்’ கொன்று குவித்து விடுகிறான். இந்த சுந்தரத் தனி வில்லியே பின்னர்