பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. கம்பன் சுயசரிதம்

ஞ்சையில் ஸரஸ்வதி மஹால் என்ற ஒரு நிலையம். மராத்திய மன்னன் சரபோஜியால் உருவாக்கப்பட்டது. மன்னன், அவன் காலத்தில் வெளிவந்த ஆங்கிலப் புத்தகங்கள் அத்தனையையும் வாங்கியிருக்கிறான். தமிழ், தெலுங்கு, மராத்தி முதலிய மொழிகளில், எத்தனை ஏடுகள் கிடைக்குமோ அத்தனையையும் சேகரித்திருக்கிறான். காவியம் ஓவியம், சித்திரம் சிற்பம், சங்கீதம், நடனம், வைத்தியம், சோதிடம், தாவரம், மிருகம், யந்திரம், தந்திரம் இன்னும் என்ன என்ன விஷயங்களைப் பற்றி வேண்டுமானாலும், அங்கே அற்புதம் அற்புதமான ஏட்டுச் சுவடிகளைப் படிக்கலாம். இந்த ஏட்டுச் சுவடிகளைத் தேடி நானாகவே போவதுண்டு சில சமயம். சில சமயம் வெளியூரிலிருந்து வரும் அன்பர்களுக்காக அவர்களுக்கு வேண்டும் சுவடியைத் தேட அவர்களுடனும் செல்வதுண்டு. அந்த மஹாலின் அத்யக்ஷகர் ஸ்ரீ K. வாசுதேவ சாஸ்திரியார், வருபவர்களுக்குச் சுவடி பார்ப்பதற்கு வேண்டிய வசதிகள் எல்லாம் செய்து கொடுப்பார்.

ஒருநாள் சாவதானமாக நான் சரஸ்வதி மஹாலில் நுழைந்தபோது, நண்பர் சாஸ்திரியார் “சார்! கேட்டீர்களா? இங்கு ஓர் அற்புதமான ஏடு ஒன்றிருக்கிறதே தெரியுமா?” என்று கேட்டார். “சரஸ்வதி மஹாலிலே எல்லாம்