பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 0 அ. ச. ஞானசம்பந்தன் ஒளிவாய்மழு உடையாய்! பொர உரியாரிடை அல்லால் எளியாரிடை வலியார்வலி என் ஆகுவது?" என்றான் (1282) 'எளியவர்களை எதிர்ப்பதனாலா வலியவர் வலியின் பெருமையைக் காட்ட முடியும்?' என்று தருக்க மூலம் நியாயத்தைப் பரசுராமனுக்கு எடுத்துக் காட்ட முற்படு கிறான் தசரதன். இந்த நியாயத்திற்குப் பரசுராமன் செவிசாய்க்கவில்லை என்பதை அறிந்ததும், தசரதன் அவனைப் புகழத் தொடங்குகிறான் : "கனிமாதவம் உடையாய்! இது பிடி நீ' என கல்கும் தனிநாயக உலகுஏழையும் உடையாய்! இது தவிராய்; பணிவார்கடல் புடைசூழ்படி கரபாலரை அருளா முனிவாறினை முனிகின்றது முறையோ?” எனமொழிவான் (1283) (காசியப முனிவனுக்கு ஏழு உலகங்களையும் தான மாகத் தந்தவரே, என் போன்ற அரசர்களை முன்னரே மன்னித்து விட்டவரே, இப்பொழுது ஏன் சினங் கொள்கிறீர்? இது முறையோ?) இவ்வார்த்தைகளும் பரசுராமனைத் தடை செய்ய வில்லை என்பது கண்ட மன்னன், அவனைக் கெஞ்சத் தொடங்கிவிட்டான்; இந்த இராமன் உம் பகைவன் அல்லன்; மேலும், இவன் இறந்துபட நேரிட்டால், யானும் என் சுற்றத்தாரும் உயிரை விட்டுவிடுவோம். என் குலம் முழுதும் நாசமடையும்படி செய்யாதீர்! யானும் இவனும் உம் அடைக்கலம்' என்னும் கருத்தில் பேசுகிறான். - 'சலத்தோடு இயைவு இலன் என்மகன்; ೫೧೯TUrite-Lit தயுமேல் உலத்தோடுஎதிர் தோளாய்! எனது உறவோடுஉயிர் உகுவேன்!