பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 93 நிலத்தோடுஉயிர் கதிவானுற நெடியாய்! உனது அடியேன் குலத்தோடுஅற முடியேல்! இது குறைகொண்டனன்,' என்றான் . (1285). தன் மகனிடம் வெறுப்பும் பகைமையும் பாராட்டி வந்த ஒருவனிடம் சென்று, என் மகனைக் கொன்று. விடாதே! என்று கூறுவது எவ்வளவு பொருள் அற்ற பேச்சு சாதாரண வீரனும் செய்யாத இச்செயலைத் தசரதன் செய்கிறான் எனில், அதற்கு ஒரே காரணம் அவன் தன் மகன்மேல் கொண்ட எல்லையற்ற அன்புதான்; பிள்ளைப்பாசந்தான். - இதுவரை கூறியவற்றால் தசரதன் தன் மகன் இராமன் மீது கொண்ட காதல் எல்லையற்றதென்பதும், அதனால் அவன் பல இடையூறுகளையும் அடிக்கடி அடைகிறான் என்பதும் வெளிப்படுகின்றனவல்லவா?