பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் சூழ்ச்சி தசரதன் மனைவி, மகன் என்ற இருவர் மாட்டும் கொண்ட கழி பெருங்காதல் காரணமாகத் தசரதன் பட்ட துயர் கொஞ்சமன்று. இக்காதல், இறுதியில் அவன் உயிரைக் குடித்த பிறகே முடிவடைந்தது. உலகில் வாழும் மாந்தர் அனைவரும் தம்மைச் சொல் தவறாதவர் என்று கூறிக் கொள்ளவே விருப்புவர். எனவே, தசரதனும் தன்னை :உரை தவறாதவன்” என்று பிறர் கூறவேண்டும் என்று எதிர்பார்த்தான்; அதற்கேற்ப நடக்க முயன்றான். ஆனால், அம்முயற்சியில் வெற்றிபெற்றானா? உண்மையில் தசரதன் உரை தவறாமல் வாழ்ந்தானா? ஆம்' என்பார் சிலர்; இல்லை என்பார் சிலர். இவ்விரு திறத்தவர் கூற்றையும் ஒரளவு காணலாம்: உரை தவறினான் என்பவர்க்கும், இல்லை என்பவர்க்கும் கம்பன் பாடிய இராமகாதையில் மேற்கோள்கள் இருக்கின்றன. 'உரை தவறினான்’ என்பவர் கூற்றை எடுத்துக் கொண்டு பார்ப்போம்: தசரதன் உரை தவறினான் என்றால், யாரிடம் உரை தவறினான்? ஏன்? மகன், மனைவி என்ற இருவரிடமும் உரை தவறி விட்டான் என்பார்கள். இராமனுக்கு முடி சூட்ட முடிவு செய்து முதல் நாள் மந்திராலோசனை நடத்தினான்