பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் C 95 மன்னவன்; சுற்றத்தாரையும், ஏனைய அரசர்களையும் அப்பாற் போகுமாறு ஏவி விட்டு, மந்திரக்கிழவரை மட்டும் வைத்துக்கொண்டு ஆலோசனை நடாத்தினான் மன்னன். எவ்வாறாயினும், அவனுடைய அமைச்சர்கள் வள்ளுவன் கூறிய இலக்கணமும் முற்றும் அமையப் பெற்றவர்கள் என்று கம்பன் கூறுகிறான். குலம் முதல் தொன்மையும் கலையின் குப்பையும் பலமுதற் கேள்வியும் பயனும் எய்தினார் கலமுதல் கலியினும் நடுவு நோக்குவார் சலமுதல் அறுத்துஅருந் தருமம் தாங்கினார் (1318) (நல்ல குலத்தில் பிறந்து, பல கலைகளையும் கற்றுக் கேள்வி ஞானமும் உடையவர்; அரசன் சினந்தாலும், நடுவு நிலை நீங்காமல் அறத்தைத் தாங்குபவர்.1 ஐயத்திற்கிடமான செயல் இத்துணை மேம்பாடுடைய அமைச்சர்களிடம் அரசன் விரிவாகப் பேசித் தன் கருத்தைத் தெரிவிக்கிறான். உரிமை மைந்தனுக்கு உரிய முடியை வழங்குவதற்கு இத்துணைப் பெரிய ஆராய்ச்சி எதற்காக?' என்றதொரு வினா நம்மை யும் அறியாமல் எழத்தான் செய்கிறது. உலகத்தில் முடியாட்சி நிலை பெற்ற நாள் முதல் அவ்வாட்சி பரம்பரை உரிமையாகவே இன்றளவும் வந்துளது. அப்பரம்பரையிலும் மூத்தவனுக்கே முடி உரித்தென்பது அனைவரும் ஒத்துக்கொள்கிற ஒன்று. அவ்வாறு இருக்கத் தசரதன் தன் மூத்த மைந்தனாகிய இராமனுக்கு முடி கவிக்க ஏன் இத்துணைப் பெரிய மந்திராலோசன்ை நடத்துகிறான்? ஒருவேளை அவர்களுக்கும் இது பற்றி முன்னரே அறிவிக்கப்படல் அரசியல் முறை என வைத்துக் கொண்டாலும், அதற்காக அவன் அவர்களிடம் இவ்வளவு கெஞ்சிக் கேட்க வேண்டிய இன்றிமையாமை இல்லையே!