பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 O அ. ச. ஞானசம்பந்தன் பதினேழு பாடல்கள் அவர்களை நோக்கி அவன் பேசுவனவாக அமைந்துள்ளன. இறுதியாக, ஆதலால் இராமனுக்கு அரசை கல்கி இப் பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குவான் மாதவங் தொடங்கிய வனத்தை கண்ணுவேன் (1343) என்று கூறி முடித்தான். இதுவரை தசரசன் பேசிய பேச்சுகள் ஒருவித ஐயத்தை நம் மனத்துள் தோற்றுவிக்கின்றன. ஏன் இவ்வளவு பெரிய முகவுரை? ஒருவேளை அவர்கள் தன் கருத்துக்கு மாறாக ஏதேனும் தடை கூறுவார்கள் என்று நினைத்தானா? அவர்கள் கருத்துக்கு மாறாக ஏதேனும் செய்ய நேரிட்டால், இவ்வளவு பெரிய முகவுரைக்கும் ஒரு பொருள் உண்டு. ஆனால், அவர்களுடைய விடையைப் பார்க்கும். பொழுது இவ் ஐயத்திற்கு இடம் இல்லாது போய் விடுகிறது. அவனுடைய இறுதி வார்த்தைகள் அவர்கட்குச் "சிந்தைபுரண்டு மீதிடப் பொங்கிய உவகை ஆங்கு எய்தச் (1344) செய்ததாகக் கவிஞன் கூறுகிறான். அவன் ஐயத் துடன் கூறுவதையும், அதற்கு அவர்கள் தெளிவுடன் விடை இறுப்பதையும் பார்த்தால், நாம் ஒரு முடிவுக்கு வரத்தோன்றுகிறது. அதாவது, அவன் மனத்தில் ஏதோ ஒர் அச்சம் குடிகொண்டுளது. இராமனுக்கு முடி கவிக்க யாரேனும் இடர் விளைப்பர் என்றே அவன் கருதினான் என்ற எண்ணம் எழுகிறது. இம்மந்திர ஆலோசனை முடிந்தவுடன் சுமந்திரன் என்னும் அமைச்சனுக்கு இராமனை அழைத்து வருமாறு: தசரதன் கட்டளை இடுகிறான். இராமன் விரைந்து வந்து வசிட்டனை வணங்கிவிட்டுத் தந்தையையும் வீழ்ந்து வணங்கினான். உடனே தந்தை மகனைத் தன் மார்புடன் அனைத்துக்கொண்டான். பிறகு, பக்க த் தி லே. இராகவனை அமர்த்திக்கொண்டு அவனிடம் முதல் வார்த்தை பேசத் தொடங்குகிறான் தசரதன்: