பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 97 'நீண்ட தோளினாய் கின்பயந்து எடுத்தயான் உன்னை வேண்டி எய்திட ஈவது ஒன்று உளது' என விளம்பும் (1373} என்ற சொற்களைக் கேட்டவுடன் நம் வியப்புப் பன்மடங்காக விரிகிறது. இது என்ன! தந்தை மைந்தனிடம் பேசுகிற பேச்சா! அதிலும் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று கருதி அதன்படி வாழ்ந்து காட்டிய இராமனிடம் இவ்வாறு பேசலாமா? ஒரு சக்கரவர்த்தி தன் மைந்தனிடம் இப்படி இரந்து கேட்க வேண்டிய பொருள் எதுவாய் இருக்கும்? இவ்வாறு கேட்டவுடன் எந்த மைந்தனும் வெட்கப்படாமல் இருக்க இயலுமா? அதிலும், பலர் நடுவில் இவ்வாறு கேட்டால், இதைவிட நாணம் தருவது யாது? இவ்வாறு மன்னன் கேட்டும், இராமன் வாய் திறந்து விடை கூறினதாகவும் தெரியவில்லை. மேலும் மேலும் அரசனே பேசுகிறான். மைந்தரைப் பெறுவர் அடைய வேண்டிய பயன் யாது என்பது பற்றியும், தான் மிக்க மூப்புப் பருவம் எய்தி விட்டமையால் இனித் தவஞ் செய்யப் போகவேண்டிய இன்றியமையாமை பற்றியும் பெரியதொரு சொற்பொழிவு செய்கிறான் தசரதன். பத்துப் பாடல்கள் முழுவதும் இச்சொற்பொழிவே நடை பெறுகிறது. இதனிடையே இராமன் இவன் கருத்தை மறுத்தோ, அன்றி ஒப்பியோ, ஒரு சொல்கூடச் சொல்ல் வில்லை. அவ்வாறு இருக்கவும், இராமன் மறுத்துக் கூறிவிடுவானோ!' என்று அஞ்சிய மன்னன், அனை போடுகிறான். தசரதன் எதுபற்றிப் பேசுகிறான் என்று கூட இராமன் இன்னும் அறியவில்லை. அந்த நிலைமை யில் மன்னன் சொல் மறா மகப் பெற்றவர் அருந்துயர் துறந்தார்." (1880) என்று கூறுவது நம் பழைய ஐயத்தை உறுதிப்படுத்துகிறது, புவிக்கெலாம். வேதமேயன இராமனிடம்' (1453) அன்புடைத் தந்தையா இவ்வாறு 町一7