பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 O அ. ச. ஞானசம்பந்தன் பேசுவது? தந்தை சொல்லை மீறாத மக்களைப் பெற்றவர் துயரம் அடைய மாட்டார்,' என்றா கூறுவது? தசரதன் மூத்த மைந்தனாகிய தனக்கு அரசாட்சியை ஏற்று நடத்துதல் கடமை என்பதை இராமன் அறிய மாட்டானா? அறிந்தால், அதை ஏற்று நடத்துவதில் அவன் ஏன் பின் வாங்க வேண்டும்? இருந்தும், அவன் கருத்தை இதுவரை ஒன்றும் வெளியிடவில்லையே! ஆய்ந்து பார்த்தால், தசரதனுடைய இச்சொற்கள் சற்று வியப்பையே தருகின்றன. இதனையடுத்து அரசன் 'புனையுமாமுடி புனைந்து இந்த நல்லறம் புரக்க நினைய வேண்டும்; நான் நின்வயின் பெறுவது ஈது' என்றான். (1381) - இராமன் இந்நிலையிலும் வாய் திறந்து பேசியதாகக் கவிஞன் கூறாமல் விட்டது இன்னும் வியப்பே! ஆனால், ஒரு மெளன நாடகம் மட்டும் நடைபெறுகிறது. அந்நாடகத்தை ஒரு பாடல் மூலம் கவிஞன் கூறுகிறான். இப்பாடலுக்குப் பலர் பலவாறு உரை கூறுவர் எனினும், இதுவரை நிகழ்ந்தவற்றை உட் கொண்டு பார்த்தால், அவர்கள் கூறும் உரை சரியானதா என்ற ஐயம் தோன்றும். பழைய பாடலும் புதிய உரையும் தசரதன் (பத்துப் பாடல்களில்) பேசிய அனைத் திற்கும், இராமன் வாய்திறந்து ஒருசொல்லுங் கூறினான் இல்லை. ஆனால், அவன் மனத்தில் மட்டும் பெரும் போராட்டம் ஒன்று நிகழ்ந்ததை அவன் முகம் குறிக்கின்றது. பெற்று வளர்த்துச் சீராட்டிய தந்தை இம்முகக்குறிப்பை அறியமாட்டானா? நன்றாகத் தசரதன் இக்குறிப்பை அறிகிறான். தசரதன் பேசத் தொடங் கியதுமே அவன் மனத்தில் உள்ளதை இராமனும்