பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 99 அறிந்து விடுகிறான். அறிந்த அந்த வினாடியிலிருந்து இப்போராட்டம் இராமன் மனத்துள் நடைபெறுகிறது போலும்! இதைக் கவனித்து விட்ட தசரதன், இராமனுக்கு மேலும் இதுபற்றி ஆராய இடங்கொடாதபடி பேசிக் கொண்டே வருகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தந்தை சொல்லைத் தனயன் தட்டி நடத்தலாகாது என்பதையும் "சொல்மறாமகப்பெற்றவர்’ என்று குறி ப் பாக த் தெரிவித்து விட்டான். இந்தச் சூழ்நிலையை மனத்துட் கொண்டு இனிப் பாடலைக் காண்போம்: . w தாதை அப்பரிசு உரைசெயத் தாமரைக்கண்ணன் காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்றுஉணர்ந்தும் 'யாது கொற்றவன் ஏவியது? அதுசெயல் அன்றோ நீதி ஏற்கென நினைந்தும்.அம் பணிதலை கின்றான் குருசில் சிந்தையை மனக்கொண்டு கொற்றவெண் குடையான் 'தருதி இவ்வரம்' எனச்சொல்லி உயிர்உறத் தழுவிச் சுருதி அன்னதன் மந்திரச் சுற்றமும் சுற்றப் பொருவின் மேருவும் பொருவருங் கோயில்போய்ப் புக்கான் (1382, 1383) தந்தை அவ்வாறு கூறத் தாமரைக் கண்ணானாகிய இராமன் அரசை விரும்பாமலும் வெறுத்து ஒதுக்காமலும் உள்ள மனத்துடன், இது கடன்' என்று உணர்ந்தும், 'அரசர் எதனை ஆணை இடுகிறாரோ, அதனைச் செய்து முடித்தலே எனக்கு நீதியாகும்’ என நினைத்தும், அப்பணி யைத் தலைமேற்கொண்டு நின்றான்.' இதுதான் பாட்டின் நேரிய பொருள். ஆனால் 'கடன், இது என்று உணர்ந்தும்' என்ற சொற்றொடர் சிறிது ஐயப்பாடான பொருளையுடையது. எதனைக் கடன் என்று இராமன் நினைந்தான்? அரசை ஏற்றுக் கொள்ளுதலையே தனது கடன் என்று உணர்ந்தான் என்று பொருள் கூறிவிட்டால், அடுத்த அடியில் உள்ள 'யாது கொற்றவன் ஏவியது,