பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 0 அ. ச. ஞானசம்பந்தன் அது செயல் நீதி,’ என்ற தொடர் பொருள் இன்றி நின்று வற்றும். அரசை ஏற்றுக் கொள்வதைக் கடன் என்று உணர்ந்தும் அரசன் கட்டளையை ஏற்றுக் கொள்வதே நீதி என்று நினைந்தும் இருந்தான்,' என்று கூறினால் இத்தொடர் பொருந்தாமை நோக்கிக்கொள்க. மேலும், 'உணர்ந்தும்' என்ற சொல்லில் உள்ள உம்மைக்கு இது பொருள் அன்று என்பதும் வெளிப்படும். என்னைத் தெரிந்திருந்தும் பேசாது போயினான்,' என்ற வழிப் பேசி இருக்க வேண்டியவன் பேசாது போயினான் என்பதை உம்மை அழுத்திக் கூறுவதை அறியலாம். அவ்வாறாயின் கடன் இது என்று 'உணர்ந்தும்' என்றவிடத்து எதனைக் கடமை என இராமன் கருதி னான் என்பது ஆய்தற்பாலது. இந்நிலையில் கம்பநாடன் குறிப்பாக மட்டும் கூறியதும், வான்மீகி விளக்கிக் கூறியது. மான ஒரு நிகழ்ச்சியை நினைவிற்குக் கொண்டு வரல் வேண்டும். அந்நிகழ்ச்சியே கைகேயி திருமணத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படுவது. அதாவது, அயோத்தி வேந்தன் தன் கோசலநாட்டைக் கைகேயிக்கும், அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தர்க்கும் மணப்பரிசிலாக (கன்னியா சுல்கம்) ஈந்துவிட்டான் என்பது. இக்கருத்தைக் கம்பநாடன் திருவடி சூட்டு படலம் 111-ஆம் பாடலாகக் கூறுகிறான். பரதன் இராமனை தேடிக் காடு சென்று அவனைக் கண்டு மீட்டும் வந்து, அவனுக்கு உரிமையான அரசை ஏற்குமாறு கூறுகின்றான். ஆனால், இவ்விடத்தில் சிறந்த பண்பாடுகட்கெல்லாம். உறைவிடமான இர ாக வன்; பரத ன் அறியாத இச்செய்தியை எடுத்துக்கூறி உண்மையில் அயோத்தி அரசு பரதனுக்கே உரியது என்பதை எடுத்துக் காட்டுகிறான். வானில் உந்தைசொல் மரபி னால் உடைத் தரணி நின்னதுஎன்று இயைந்த தன்மையால் உரனில் பிேறந்து உரிமை ஆதலால் அரசு கின்னதே; ஆள்க' என்றனன். (2485).