பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 0 அ. ச. ஞானசம்பந்தன் தந்தையைக் குறிக்கும் எத்தனையோ சொற்கள் இருக்க வும், கொற்றவன் என்றும் ஏவியது என்றும் கூறியது, இராமன் இந்நிலையில் அவனை மன்னனாகவே மதித் தான் என்பதை அறிவுறுத்தவேயாம். இராமன் மனத்துள் நினைத்ததை அவன் கூற்றாகவே கூற வந்த கவிஞன், "தந்தை' என்றோ, தசரதன்' என்றோ குறிப்பிடாமல், "கொற்றவன்' என்று குறிப்பிட்டது. இக்கருத்தை வலியுறுத்தவேயன்றோ? இதனை அடுத்துள்ள பாடலின் முதல் அடி நம் மனத்தில் இக் கருத்தை இன்னும் ஆழப் பதியச் செய்கிறது. இராமன் மனக்கலக்கத்தைக் குறிப்பால் உணர்ந்த மன்னன், ஒருவேளை இராமன் இந்நிகழ்ச்சியை எடுத்துக் கூறிப் பலர் முன்னே தன் கட்டளையை நிறைவேற்ற மறுத்து விடுவானோ என்று அஞ்சித்தான் போலும் 'தருதி இவ்வரம்,' எனச் சொல்லி உயிர் உற அவனைத் தழுவி விட்டான்! பத்து நிமிடங்கட்கு முன்னர் மகனைத் தழுவிய மன்னன், மீட்டு அவனைத் தழுவ என்ன நிகழ்ந்து விட்டது? இதனையும் குறிப்பால் உணர்த்த வந்த கவிஞன், 'குருசில் சிந்தையை மனக்கொண்டு கொற்ற வெண்குடையான்' எனவும் குறிக்கிறான். இராமனது மன நிலையை மனத்துள் வாங்கிக்கொண்ட தசரதன், உடனே அவனை நோக்கி, இவ்வரத்தை எனக்குத் தருவாயாக, என்று கூறி அவனை மார்புடன் அணைத்துக் கொண்டான்,' என்பதே இக்கவியின் பொருள். தன் கருத்துக்கு எதிராக இராமன் ஏதேனும் கூறிவிடுவான் என்று அஞ்சிய மன்னன் இவ்வாறு அவனைப் பேச விடாமல் தடுத்து விட்டான் என்று கூறுவதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இதனை அடுத்து, இக்கட்சி பேசுவோர் எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சியும் உண்டு. இராகவன். மணமுடித்துக்கொண்டு அனைவரும் மிதிலையிலிருந்து