பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O. 103 அயோத்தி மீண்ட விரைவிலேயே தசரதன் பரதனை அவனுடைய பாட்டன் நாட்டிற்கு அனுப்பி விடுகிறான். அதனைக் கூற வந்த கவிஞன், அண்ணல் (தசரதன்) அப்பரதனை நோக்கி ஆண்டகை எண்ணருந் தகையதோர் பொருள் இயம்புவான்,' (1308) என்றே குறிக்கிறான். "தசரதன் பரதனை நோக்கி நினைத்தற்கரிய ஒரு செய்தியைச் சொல்லினான், என்பதே இதன் பொருள். நினைத்தற்கரிய இச்செய்தி எதுவாக இருக்கலாம் என்று நாம் வியப்புடன் மேலே சென்றால், காணப்படும் கவிதை இதோ வருகிறது: ஆணைகின் தன்முது தாதை ஐயமின் காணிய விழைவதுஓர் கருத்தன் ஆதலால் கேணியில் வளைமுரல் கேக யம்புகப் * , பூண் ஒளிர் மார்பic போதி, என்றனன் (1309). 'ஐய, பரத, வயது முதிர்ந்த உன் பாட்டனார் உன்னைக் காண விரும்புகிறார் ஆகலின், கேகய நாடு சென்று வருக,' என ஏவினானாம். இதுவா எண்ணரும் பொருள்! என்று வியப்படைய வேண்டியுளது. ஆனால், குறிப்பால் அனைத்தையும் உணர்த்தும் கவிஞன், இங்கு அறிவிப்பது ஒன்றுண்டு. இது பரசுராமப் படலத்தின் இறுதிக் கவிதைக்கு மூன்றாவதாய் உள்ளது. இதனை அடுத்து நிகழ்வது மந்திரப்படலந்தான். பரதனைப் பாட்டன் வீட்டுக்கு அனுப்பிய உடனே முடிசூட ஏற்பாடு செய்தான் மன்னன் என்று குறிப்பால் பெற வைக்கிறான் சுவிஞன். இதன் உட்கருத்து யாதாக இருக்க முடியும்? இராமன் முடி சூட்டலுக்குப் பரதன் தடையாகலாம் என்று மன்னன் கருதியதால், அவனை நீக்கிவிட்டு உடனே தான் கொண்ட கருத்தை முற்றுவிக்க முனைந்தான் என்பதே இதனால் விளங்குகிறது. - இவற்றிலிருந்து தசரதன்மாட்டு நம்மையும் மீறிக் குறை காணத்தான் தோன்றுகிறது. அவன் கைகேயிக்கு