பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 0 அ. ச. ஞானசம்பந்தன் முன்னர்க் கொடுத்த அரசை அவள் அறியாமல் இராமனுக்குக் கொடுக்கின்றான் என்பது மட்டுமன்று. இதில் மட்டும் அவன் உரை தவறிவிட்டான் என்ப தில்லை; இதனை அடுத்த நிலையிலும் இதே தவற்றைச் செய்கிறான். கைகேயி வரம் இரண்டு கேட்டதை உடன் தர இயலாமல் மறுத்துப் பார்த்தும் அவள் விடவே மாட்டாள் என்பது தெரிந்த பின்னர், ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் (1538) என்று வரங்கள் இரண்டையும் தந்ததாகக் கூறிவிடுகிறான் தசரதன். எனினும், அவன் மனத்தில் ஒரு சிறிய ஆசை இருந்துகொண்டுதான் இருக்கிறது. தன்னையும் மீறி இராகவன் காடு செல்லாமல் மீண்டுவிடவேண்டும் என்பதே அவ்வாசை, அரசன் அவ்வாசையுடன் இருப்பதையும் கவிஞன் குறிப்பாக நமக்கு அறிவிக்கிறான். கைகேயியின் அரண் மனையில் அவள் கேட்ட வரத்தைத் தந்து விட்டு மயக்க முற்ற நிலையில் வீழ்ந்து கிடக்கும் மன்னனைக் காண வசிட்டன் வருகிறான். வந்த மாமுனி, மன்னனை நோக்கி 'அரசே, அயரேல்! அவனை இன்றே ஏகா வண்ணம் தகைவன் உலகோடு' என்று கூறிச் செல்கிறான். இவ்வார்த்தைப்படி ஒருவேளை நடைபெறாதா என்று மன்னன் எதிர்பார்க்கிறான். அவனைத் தேற்ற வேண்டிய கடப்பாடு உடைய கோசலை, மெள்ள அவன் காதின் அருகிற்சென்று, முனிவனுடன் நம் ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே!’ (1674) என்று கூறுகிறாள். இதிலுள்ள 'வரினும் வரும்' என்ற உம்மையால், கோசலைகூட வாய்மை வீரனாகிய வள்ளல் இராமன் மீள்வன் என்று எதிர்பார்க்கவில்லை என்பது அறிய முடிகிறது. ஆனால், மன்னன் மனநிலை இதற்கு எதிர் மாறாகவே உள்ளமை கண்கூடு. ஒன்றும் தெரியா ம்ம்மர் உள்ளத்து அரசன் மெள்ள, வன் திண் சிலைநம் குரிசில் வருமே! வருமே!’ என்றான்." (1675) இதனால்,