பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 105 தந்த வாக்கை மீறிக்கொண்டு இராமன் வருதலும் தவறன்று என்றே மன்னன் நினைக்கிறான் என்பது பெறப்படுகிறதன்தோ? இதுகாறும் கூறியவற்றால், ஒர் உண்மை வெளிப் படுதல் கண்கூடு. கம்பநாடன் படைத்த தசரதன், இராமன்மாட்டு எல்லையற்ற காதல் கொண்டுள்ளான் என்பதும், அக்காதல் காரணமாக ஓர் அளவு அறம் பிறழவும் துணிந்துவிட்டான் என்பதும் வெளிப்படை. ' இனி அவன் உரை தவறவில்லை என்பார் வாதத்தையும் மனைவியிடம் அவன் கொண்டுள்ள மனப்பாங்கையும் காண்போம்: தசரதனாம் அயோத்தி வேந்தனுக்கு இராமன் மகன் மட்டுமல்லன்; உயிராயும் இருந்தான். * எனவே, உயிராய் விளங்கிய இராமனைப் பிரிந்து வாழத் தசரதன் விரும்பவில்லை. இவ்வாறு இருப்பினும் தசரதன் தான் கொடுத்த வரம் இரண்டையும் மீட்டும் பெற்றுக்கொள்ள விருப்பவில்லை. இதனை அவனுடன் தொடர்புடைய அனைவருமே ஒப்புக்கின்றனர். இஃது அவன் உரை தவறாதவன் என்பார் கட்சியாகும். கைகேயி கேட்ட இரு வரங் களையும் தசரதன் இலகுவில் தரவில்லை என்பது உண்மை யாயினும், இறுதியில், - 8. இக்கருத்துக்கு வான்மீகத்திலிருந்தும் கம்பனிலிருந்தும் வேறு ஏதுக்களும் காட்டி முதன் முதலில் நூல் வடிவாக வெளியிட்ட பெருமை பேராசிரியர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்களுடையதே.