பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 0 அ. ச. ஞானசம்பந்தன் ஈந்தேன், ஈந்தேன், இவ்வரம் என்சேய் வனமாள மாய்ந்தே நான்போய் வான் அர சாள்வன் (1538) என்று ஐயத்திற்கு இடமின்றிக் கூறிவிடுகிறான். இனி இவ்வரங்களைப் பெற்றுக் கொண்டவளாகிய கைகேயியும் இவற்றைப் பெற்றுக் கொண்டதாகவே கூறுகிறாள். தன் ஏவலால் தன்னைக் காண வந்து வணங்கிய இராகவனை நோக்கி, 'ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, கீபோய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருக் தவமேற் கொண்டு பூழிவெங் கானம் கண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி ஏழிரண்டு ஆண்டில் வாஎன்று இயம்பினன் அரசன்' என்றாள் - (1601) இவ்வாறு அரசன் இயம்பினான் என்று கூற அவளுக்கு என்ன உரிமை இருந்தது என்பது அறியக்கூடவில்லை. அரசன், வரந்தந்தேன்' என்று கூறினமையின், அவ்வரங்களின் உட்கோளை அவன்மேல் ஏற்றிக் கூறினாள் போலும் இது எவ்வாறாயினும், அவன் உரை தவறாமல் வரத் தந்துவிட்டான் என்பதை அவளும் ஒப்புக்கொள்கிறாள் என்பதற்கு இதனை எடுத்துக் காட்டாகக் காட்டுவர். - அடுத்து அரசன் தந்த வாக்கால் அல்லற்பட்டுக் காடு செல்ல வேண்டியவனாகிய இராமனுக்கு அரசன் வாக்குத் தந்ததாகவே ஒப்புக்கொள்கிறான். அரசனுடைய கட்டளையை இராமன் மூலம் கேட்டு வருந்துகிற கோசலை, இராமனுடன் தானும் காட்டுக்கு வந்துவிடுவ தாகவே கூறி அரற்றுகிறாள். அந்நிலையில் இராமன் அவளைத் தேற்றுமுகமாக, - - -