பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O. 107

  • * * * * * * * * * * * * * * * * * * * * * * .......அருங் கற்பினோய்!

பொய்த்தி றத்தினன் ஆக்குதி யோபுகல் மெய்த்தி றத்துகம் வேந்தனை நீ? (1619) என்றும், 'எந்தையை மறந்தும் பொய் இலன் ஆக்கி' (1621) என்றும் கூறுகிறான். மெய்த்திறத்து நம் வேந்தன்” என்றமையின், இராமனும் தசரதன் உறுதியை அறிந்தவன் போலவே பேசுகின்றான். மேலும், கைகேயி: யிடம் விடை பெறும்பொழுது கூட எந்தையே ஏவ, நீரே உரைசெய, இயைந்தது உண்டேல் உய்ந்தனன் அடியேன்! (1600) என்றும் கூறுகிறான். ஆகலின், அவன் தந்தையைப் பற்றிக் கொண்டிருந்த எண்ணம் உறுதியாகிறது. இவ்விருவர் தவிர, வேற்றவரும் இதுபற்றிக் கூறு கின்றனர். இராமனால் மறைந்து நின்று கொல்லப்பட்ட வாலி இராமனை இழித்துப் பேசத் தொடங்குகையில், தசரதன் பெருமையைப் பின்வருமாறு பேசுகிறான்: வாய்மையும் மரபும் காத்து மன்உயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்த னேநீ? பரதன்முன் தோன்றி னாயே! (4018) இவ்விடத்தும் தசரதன் வாய்மை காத்து உயிரை விட்டவ னாகவே பேசப்படுகிறான். இவ்வாறு பலராலும் புகழப் படுகிறான் ஆகலின், தசரதன் தன் சொல்லைக் காத்தவ னாகவே கருதப்படல் வேண்டும் என்பது இவருடைய வாதம். இவ்வாதத்தில் இராமனும் வாலியும் உண்மையில் நடந்ததை நேரே கண்டு அறியாதவர்கள். எனவே, அவர்