பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 O அ. ச. ஞானசம்பந்தன் களுடைய சொல்லுக்கு அதிக மதிப்புத் தந்து இடர்ப்பட வேண்டா. கைகேயி உண்மையை அறிவாள் எனினும், தன் கருத்து நடைபெறுவதற்காகவேனும் அ ர ச ன் கூறி விட்டான், என்று அவன் கூறாத ஒன்றைக் கூறிவிட்டாள். தசரதனைப் பொறுத்தவரை வாயால் வரம் ஈந்தேன் ஈந்தேன்' என்று கூறிவிட்டு, செயல் அளவில் அது நடைபெறாதிருக்கப் பாடுபடுகின்றான். இ ைவ அனைத்தையும் நோக்கும்பொழுது உண்மையில் தசரதன் உரை தவறாதவன்தானா என்னும் ஐயம் மீட்டும் எழத்தான் செய்கிறது. தன் சொல்லைக் காக்க வேண்டித் தானே அவன் உயிரை விட்டான்? என்று எவரேனும் கேட்டாராகில், அதற்கும் கவிஞன் விடை கூறுகிறான். அவனையும் மீறியே அவன் உயிர் பிரிகிறது. சாதாரண மக்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள எவ்வளவு பாடு படுவார்களோ, அவ்வளவு பாடு அவனும் படுகிறான். மைந்தன் காடு சென்றுவிட்டால் தன் உயிர் போவது உறுதி என்பதை அவன் நன்கு உணர்கிறான். அண்ணல் வனம்ஏ குதலும், என்றன் உயிர்வி குதலும் இறையுந் தவறா (1692) என்று அவனே கூறுகிறான். இவ்வாறு இருந்தும், இராமனை காட்டுக்கு அனுப்பாதிருக்க அவன் செய்யும் முயற்சிகள் சில அல்ல. o அவன் வரங்கொடுத்த நிகழ்ச்சியை அறிந்த இராமன் அவனை மறந்தும் பொய்யிலன் ஆக்க” (1621) முற்படு கிறான். கைகேயி தன்னிடம் வந்த இராமனை உள்ளே வர விடாமல் வெளியே வந்து அவனைக் கண்டு கூற வேண்டிய வற்றைக் கூறிவிட்டாள். ஒரு நொடியில் நடைபெற்ற வற்றைத் தன் கூர்த்த மதியால் அறிந்துகொண்ட இராமன், ஒரு வியப்பான செயலைச் செய்கிறான். இது உலகியலுக்கும் ஒரளவு புறம்பானது ஆகும். கைகேயி கூறிய சொற்களைக் கேட்ட அப்பெருமான், -