பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O. 109 மன்னவன் பணியன்று ஆகில் நும்பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ? என்இதின் உறுதி அப்பால்? இப்பணி தலைமேல் கொண்டேன் மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் (1604) என்று கூறிவிட்டுப் புறப்படுகின்றான். இப்பாடலின் முதற் அடியில் உள்ள மன்னவன் பணி அன்று ஆகில்' என்ற சொற்கள் ஒரளவு ஆராய்ச்சிக்கு உரியன. கைகேயி இவனிடம் கூறும்பொழுது, 'இயம்பினான் அரசன்' (1601) என்றுதானே கூறினாள்? அவ்வாறு இருக்கவும், 'அரசன் பணி அன்றாகிலும்’ என்று இராகவன் குறிப் பிட வேண்டிய இன்றியமையாமை எங்குற்றது? தாயின் சொல்லுக்குத் தான் வைத்திருந்த மதிப்பை இதன் மூலம் வெளியிட்டான் என்று கூறுவர். ஆனால், அவள் தந்தை, யின் ஆணை’ என்று கூறி வாய் மூடு முன், தந்தையின் ஆணை அன்றாகிலும்’ என்று மகன் கூறுவது தந்தையின் மனநிலை பற்றி மகன் கொண்டிருந்த கருத்தை நமக்குப் புலப்படுத்தாமல் விடாதன்றோ? எக்காரணம் பற்றியும் தன்னைக் காட்டிற்குப் போகச் சொல்லும் ஆணையைத் தந்தை இட்டிருக்க மாட்டான் என்பதை உறுதியாக இராமன் அறிவான். ஆனாலும் அதனை, எடுத்துக்காட்ட இஃது இடமன்று; காலமும் அன்று. எனவே, தாயுரையை மெய்யெனவே ஏற்றுக் கொள்கிறான். ஆனால், இராமன் இதனை நம்பவில்லை என்பதை அவன் வாயால் வெளிப் படையாகக் கூறாவிடினும் அடுத்து அவன் செய்யும். செயலால் வெளிப்படுத்துகிறான். தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருங் தவம்மேற் கொண்டு. பூழிவெங் கானம் கண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி ஏழிரண்டு ஆண்டில் வரப் போகிற ஒரு மகன் தந்தையைக் கண்டு விடைபெறாமல் போகலாமா? அதுவும் அத்தந்தை வீட்டினுள் இருக்கவும், வாயிற்படி வரை வந்த மகன் ஒகு.