பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 0 அ. ச. ஞானசம்பந்தன் வார்த்தைகூட அத்தந்தையிடம் நேரிற் கூறிக்கொள்ளாமல் செல்ல வேண்டிய காரணம் யாது? அத்தந்தையின் உயிரனைய மகனா இவ்வாறு செய்வது? ஆனாலும், அவ்விராமன் தந்தையைக் கண்டு விடை பெறாமல் போய் விட்டான் என்று கவிஞன் கூறுகிறான். என்றுகொண்டு இனைய கூறி அடிதொழுது இறைஞ்சி மீட்டும் தன்துணைத் தாதை பாதம் அத்திசை நோக்கித் தாழ்ந்து ..... கோசலை கோயில் புக்கான் (1605) 總象翰總緣或 餘緣 ↔ 總蜂。 தந்தை அருகிற்சென்று விடை பெறாமல் அவன் இருக்கும் திசை நோக்கி வெளியே இருந்தபடியே வணங்கி விட்டுப் போனான் என்றால், இதன் காரணம் யாது என்பதை ஆயவேண்டாவா? கைகேயி கூறியபடி தசரதனே இராமனைக் காடு செல்ல ஏவினான் என்று இராமன் நம்பியிருப்பின், அவனிடம் நேரிற்சென்று விடைபெறத் தடை யாது? எப்பொழுது இராமன் வெளியில் நின்ற படியே வணக்கஞ் செலுத்தி விட்டுப் போனானோ, அப்பொழுதே அவன் கருத்து விளங்குகிறது. தன்னை நேரே கண்டு விட்டால் தந்தை அத்துயரைப் பொறுக்க மாட்டான் என்பதை உணர்ந்த இராகவன், தந்தைக்கு அத்தகைய இக்கட்டான நிலையை உண்டாக்க விரும்ப வில்லை. வேறு வழியின்றித் தந்தை தாய்க்கு வரம் கொடுத்த நிலையை மனத்துட்கொண்ட இராமன், இப்பொழுது அவன் தன்னைக் காண நேர்ந்தால் என்ன ஆவானோ என்பதைக் கற்பனை செய்து பார்க்கிறான். ஆதலின், தந்தை தன்னைக் கண்டு இரண்டு வகையிலும் அல்லலுறும் நிலையிலிருந்து அவனைக் காக்க வேண்டி உள்ளே, செல்லாமற் சென்றுவிட்டான். இதனால் தந்தை மகனிடத்துக் கொண்டிருந்த அன்பைப் போலவே மகனும் தந்தையிடம் அன்பு கொண்டிருந்தான் என்பது புலனா கிறது. தந்தையின் குணாதிசயங்களை நன்கு அறிந்தவனா