பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் C 111 கலின், முடிசூட்ட அவன் பட்ட அவசரம் வினையாய் விளைந்ததை நினைந்து மேலும் தன்னால் இன்னல் விளையாதபடி காக்கவே ஒதுங்கிக் கொண்டான். தசரதன் மனைவியரிடத்து- சிறப்பாகக் கைகேயி யிடத்து நடந்துகொள்ளும் முறை ஆராயற்பாலது. மனைவியர்மாட்டுக் கழிபெருங்காதலுடையவன் அரசன் என்பது வெளிப்படை. இன்றேல், ஆயிரக்கணக்கான மனைவியருடன் வாழ்ந்தான் என்பது பொருந்தாதன்றோ! இத்துணைப்பேர் கிழத்தியர் இருப்பவும் சிறப்பாகக் கைகேயிமாட்டு மிகுந்த காதல் கொண்டிருந்தான் என்பதும் அறிய முடிகிறது. அதேபோலக் கைகேயியும் அவன்மாட்டு அன்பு கொண்டிருந்திருக்க வேண்டும். என்றாலும், அவனது அன்பைக்காட்டிலும் அவளது அன்பே தூய்மையும் ஆழமும் உடையதாய் இருந்தது. தசரதன்மாட்டுக் கொண்ட பெருங்காதலால் அவனுக்கு உயிர் அனைய இராமனும் கைகேயிக்கு உகந்தவனாயி னான். தான் பெற்ற மைந்தனை விட்டு மாற்றாள் மகனிடத்து இத்துணை அன்பு பெருக இதுவே பெருங் காரணமாய் அமைந்தது போலும் இராமனுடைய நற்பண்பே காரணமெனின், பரதனும் இராமனை ஒத்தஏன், மேம்பட்ட- நற்பண்புடையவன். அவ்வாறு இருக்கக் கைகேயி இராமன்மேல் அதிக அன்பு செலுத்தி அவனைத் தன்மாட்டே இருத்தி வளர்க்கக் காரணம், அவன் தன் கணவனாகிய தசரதனுக்கு உயிரினும் இனியன் என்பதேயாம்; இந்நிலை ஊரவர் அனைவரும் அறிந்த ஒன்று என்பது மக்கள் பேசும் பேச்சாலும் வெளிப்படு கிறது. இராமன் சிற்றவை கோயில் நோக்கி வருகையில் ಟ್ರಿìàಿ ಛff ! தாய்கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால் கேகயன் மடக்தைகிளர் ஞாலம் இவன் ஆள்வான் ஈகையில் உவந்தனன் இயற்கை இது என்றால், தோகையவள் பேருவகை சொல்ல அரிது என்பார் (1591)