பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 0 அ. ச. ஞானசம்பந்தன் இதனால், இராமன்மாட்டுக் கைகேயி கொண்டிருந்த அன்பு தொடக்கத்தில் கணவன் காரணமாகத் தொடங்கி இறுதியில் அவன் நற்பண்பு காரணமாக நிலைத்தது எனலாம். இஃது இவ்வாறாயின், தசரதன் நிலை யாது? அவன் கைகேயிமாட்டுக் கழிபெருங்காதல் கொண்டது உண்மை யாயின், அவள் மகனிடத்தும் அக்காதல் விரிந்திருக்க வேண்டுமன்றோ? அதற்கு மறுதலையாகப் பரதனிடம் அவன் ஒரளவு வெறுப்புமன்றோ கொண்டிருந்திருக் கிறான்? மிதிலையிலிருந்து மீண்டு வந்த சின்னாட்களுக் கெல்லாம் பரதனைக் கேகய நாட்டுக்கனுப்பியதும், அவன் சென்றவுடனே மந்திராலோசனைக் கூட்டம் கூட்டியதும், இராமனுடைய முடி சூட்டு விழாவை விரைவுபடுத்தியதும், அம்முடி சூட்டு விழாவிற்கூடப் பரதனை வந்து கலந்து கொள்ளுமாறு சொல்லி அனுப்பாததும் சேர்த்து வைத்து நோக்குகையில், தசரதன் எண்ணம் தூய்மையானது தானா!' என்ற ஐயம் தோன்றத்தான் செய்கிறது. வரம் என்ற பெயரால் தனக்கு ஆகாதவற்றைப் பெற்றுக் கொண்ட கைகேயியை மன்னன் ஒரளவு வெறுப்பது முறைதான் என்று கூறலாம். அதிலுங்கூட ஒரு வகையான வெறுப்புத் தெரிகின்றது. கைகேயிக்குத் தெரியாமல் தான் ஒரு காரியத்தை முடித்து விட்டதாக மனப்பால் குடித்துக்கொண்டு வந்த தசரதனுக்குக் கைகேயி யின் சொற்கள் இடிபோன்றிருந்தன. அமைச்சர் முதலிய பிறரிடமிருந்து தன் கருத்துக்கு (இராமனுக்கு முடி சூட்ட வேண்டும் என்ற எண்ணத்துக்கு) மாறுபாடு வரலாம் என்று நினைத்தமையாலேயே மந்திர சபையில் பெரிய முகவுரையுடன் பேசினான் தசரதன். ஆனால், அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர் அனைவரும் அவன் கருத்தை உடனே ஏற்றுக் கொண்டனர். இதனால், பெருத்த மனக்களிப்புடன் தசரதன் கைகேயி வீட்டினுள் துழைந்தான். ஆனால், அவன் சற்றும் எதிர்பாராமல்,