பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்இல் நாடும் மன்னனும் 0 118 அவளிடம் பெரிய ஏமாற்றத்தை அடைந்தான். இதனாலும் அவனுடைய கோபம் அதிகமாகி விட்டது. தன் விட்டிலேயே தனக்குப் பகை உள்ளது என்பதை அவன் அறியவில்லை. எதிர்பாராத இந்த ஏமாற்றம் மேலும் அவனுடைய கோபத்தைக் கிளறிற்று. இத்துனைக் கோபமும் கைகேயியின் மேல் செல்வது முறை. அவள் நல்லவளோ தீயவளோ, அவன் சினம் அவள் மேல் செல்வதற்கு ஒரு காரணமேனும் காணலாம். அவனுக்கும் அவளுக்கும் இடையே நடந்த இப்போராட்டத்தில் பரதன் பங்கு பெறல் முறையே இல்லை. என்றாலும், தசரதன் பரதன் மேல் பெருஞ்சிற்றம் கொள்கிறான். அவனே பரதனைப் பாட்டன் வீட்டிற்கு அனுப்பினான். அப்படிப் பரதன் செல்லுமுன் இராமனுக்கு முடி சூட்டல் நடை பெறும் என்பதை யாரும் அறியார்." அவ்வாறு இருக்க, பரதன் எவ்வாறு கைகேயியின் சூழ்ச்சிக்கு (அது சூழ்ச்சியானால்) உடந்தையாயிருக்க முடியும்? அவன் உடந்தையாயில்லை என்றால், அவன் மேல் தசரதனுக்கு ஒரன் இத்துணைக் கோபம் வர வேண்டும்? உண்மையில் பரதன்மேல் ஓரளவு அன்பாவது இருந்திருப்பின், அவன்மேல் மன்னனுக்குச் சீற்றம் வரக் காரணமே இல்லை. கைகேயி, பர்தன் என்ற இருவர் மேலும் அவன் கொண்ட கோபத்தால் இழிந்த மக்களைப் போல ஏசத் தொடங்கிவிடுகிறான். கைகேயியின் தாலியை அறுத்து, அந்தக் கயிற்றினால் பரதனுக்குக் காப்புக் கட்ட வேண்டுமாம்! இவை தசரதனுடைய சொற்கள். பழிக்கு காணாய் மாணாப் பாவி இனி.என் ಲಖ?೭ir. கழுத்தில் காண்டன் மகற்குக் காப்பின் நானாம் என்றான். (1653). கோசல நாட்டின் சக்கரவர்த்தி பேசக்கூடிய சொற்களா இவை? . • . 8 سيسته