பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 O அ. ச. ஞானசம்பந்தன் ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் (குறள் 139) என்ற ஒழுக்க நெறியை மறந்து தசரதன் பரதன் மேலும் இத்தகைய கடுஞ்சினம் கொண்டு பேசினான் என்பது, அவன் பரதன்மேல் எப்பொழுதும் அன்பு கொண்டிருக்கவே இல்லை என்ற கருத்தை வலியுறுத்துகிறதன்றோ? எத்துணைத் தீயவளாயினும் தசரதனுடைய இந்தச் சூழ்ச்சியை முதன்முதலில் காண்பவள் கூனியே. 'பரதனைத் தேக்கு உயர் கல்.அதர் கடிது சேண் இடைப் போக்கிய பொருள் எனக்கு இன்று போயிற்றால் (1465) தேக்கமரங்கள் செறிந்த கல் வழியே நீண்ட தூரத்திற்குப் போகுமாறு பரதனை விரைவுபடுத்தி அனுப்பிய காரணம் இன்றுதான் எனக்கு விளங்குகிறது,' என்று அவள் கண்டு பிடித்த இக்காரணத்தைக் கைகேயிக்கு எடுத்துக் கூறுகிறாள். தசரதனுக்குப் பரதனிடத்தில் נשיח עש காரணத்தாலோ வெறுப்பே நிறைந்திருந்தது என்பதையும் அவளே குறிப்பிடுகிறாள். . . ." தந்தையும் கொடியன்! கல் தாயும் தீயளால் - எந்தையே பரதனே! என்செய் வாய்! என்றாள் (1466) என்னும் இவ்வடிகள் தசரதன் மன நிலையை விளக்கப் போதுமானவை. தசரதன் கைகேயியினிடத்து உடல் இன்பம் தவிர, உண்மைக் காதல் கொண்டிருந்தானோ என்பது ஆய்தற்குரியது. அவனுடைய காதல் உண்மை யானதாய் இருப்பின், அக்காதலின் பயனாகிய பரதன் மாட்டு அவன் விருப்பம் கொள்ளாமல் இருக்கக் காரண மில்லை -