பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் C 115 ஆயிரம் இராமர் கின்கேழ் ஆவரோ தெரியில் அம்மா : (23.37), என்று குகனாலும், - - - கிறைகுணத்தவன் நின்னினும் கல்லனால் (1609) - TiTಣಗಿಸು கோடி இராமர்கள் என்னினும் - அண்ணல் கின் அரு ளுக்கு அரு காவரோ ? (10181) என்று கோசலையாலும், எத்தாயர் வயிற்றினும் பின்பிறக் தார்கள் எல்லாம் ஒத்தால் பரதன் பெரிதுஉத் தமன் ஆவ துண்டோ ? (3977) என்று இராமபிரானாலும் பாராட்டப்படுகின்ற பெருமை இராமாயணம் முழுவதிலும் பரதன் ஒருவனுக்குத்தானே உண்டு? அத்தகைய பரதன்மேல் தசரதனுக்கு வெறுப்போ அன்றிப் பற்றின்மையோ ஏற்படக் காரணம் யாது? இராமன்மாட்டு அவன் கொண்ட கழிபெருங்காதல் ஏனைய மைந்தர்மாட்டும் செல்ல வேண்டிய அன்பைத் தடை செய்துவிட்டதா? அதற்கேற்பவே அவனும் செயல் களை ஆற்றிக்கொண்டே வருகிறான். ........................'களினம்போல், கையான் இன்றுஎன் கண்எதிர் நின்றும் கழிவானேல் உய்யேன் கங்காய்! உன் அப யம்என் உயிர்' என்றான் (1527) இவ்வாறு இராமன் பிரிவால் தன் உயிர் போய்விடும் என மன்னன் கருதக் காரணம் யாது? முன்னரே விசுவாமித்திர ருடன் இராமனை அனுப்பிய பொழுது இராமனைப் பிரிந்தும் உயிர் வாழ்ந்தவன்தானே? விசுவாமித்திர முனிவனுடன் அக்கரிய செம்மலைக் கூட்டி அனுப்பிய இவன், இப்பொழுது ஏன் இராமன் பிரிவுக்கு இவ்வளவு வருந்த வேண்டும்? இராமன் பிரிந்தால் உயிர்