பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 0 அ. ச. ஞானசம்பந்தன் போய்விடும் என்று மன்னன் கூறியது கைகேயியை அச்சுறுத்த எழுந்த சொற்கள் அல்ல என்பதைப் பின் நிகழ்ச்சிகள் நமக்கு அறிவிக்கின்றன. எவ்வாறாயினும், மகன் மீண்டு வந்து விடுவான் என்ற நப்பாசையால் உயிரை வைத்துக் கொண்டிருந்த மன்னன் எதிரிலே வசிட்டனும் சுமந்திரனும் வந்து நிற்கின்றனர். இராமன், இலக்குவன், சீதை என்னும் மூவரையும் காட்டின் எல்லையில் கொண்டு விட்டுவிட்டுச் சுமந்திரன் இரதத்தை மீட்டும் நாட்டுக்கு ஒட்டி வந்து விட்டான். இரதம் திரும்பி விட்டமையின், இராமனும் திரும்பி விட்டான் போலும்!' என்று மக்களுள் பலர் நினைக் கின்றனர். இந்நிலையில் இரதம் மீண்டு விட்டதென்று அவர்கள் பேசிக் கொள்ளும் பேச்சு மன்னன் காதிலும் விழுகிறது. . இரதம்வந்து உற்றது என்றாங்கு யாவரும் இயம்ப லோடும் வரதன்வந்து உற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான்; புரைதபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி விரதமா தவனைக் கண்டான் வீரன்வந் தானோ? என்றான் (1896) உடன் நிற்பவர்கள் இரதம் வந்து விட்டது என்று பேசிக் கொள்வதைக் காதில் வாங்கிய மன்னன் கண்களை அகல விழித்துப் பக்கத்தில் நின்ற முனிவனைப் பார்த்து, :இராமன் மீண்டு விட்டானா?” என்று விசாரித்தானாம். இராமன்மாட்டு எல்லையற்ற காதல் கொண்ட தந்தை யாயினும் இராமனுடைய ஒப்புயர்வற்ற பண்பாட்டைத் தசரதன் அறிந்து கொள்ளவில்லை; அதனை அறிந்து கொள்ளக்கூடிய மனநிலை தரசதனிடம் இல்லை. தன் சொல் என்ற பெயரால் சிற்றன்னை இட்ட கட்டளையை eற மாட்டான் என்பதைத் தசரதன் அறிந்திருப்பின்,