பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 117 இக்கேள்விக்கு இடமே இல்லை. எனினும், கேள்வி கேட்டு விட்டான். ஆனால், இராமன் போய் விட்டான்,' என்ற அவச் சொல்லைக் கூற விருப்பம் இல்லாதவனான முனிவன் அப்பாற் போய் விட்டான். முனிவனுடைய முகபாவமும் அவன் விடை இறுக்காமல் அப்பாற் போய் விட்ட செயலும் நடந்தவற்றை உணர்த்தியுங்கூட, அதனால் அரசன் அமைதி அடையவில்லை. மீட்டும் சுமந்திரன் பக்கம் திரும்பி அதே வினாவை எழுப்பு கிறான்: காயகன் பின்னும் கல்தேர்ப் பாகனை நோக்கி, 'கம்பி சேயனோ அணிய னோ?' என்று உரைத்தலும் தேர்வ லானும், வேய்உயர் கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினான்' என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான் - - - (1898) (தசரதன் தேர்ப்பாகனை நோக்கி, 'இராமன் தூரத்தே உள்ளானா, அண்மையில் உள்ளானா?” என்று கேட்க, அவன், இராமன், சீதை, இலக்குவன் என்ற மூவரும் மூங்கில் அடர்ந்த காட்டில் சென்றனர்” என்றான். சென்றனர்' என்ற சொல் செவிவழிச் சென்றவுடன் மன்னன் உயிரும் சென்றுவிட்டது.1 சம்பராசுரனையும் போர் தொலைத்த தசரத சக்கரவர்த்திக்கு முடிவு போயினான்' என்ற சொல்லால் வந்துற்றது! எல்லையற்றுச் செல்லும் அவா அல்லது பற்று நல்ல பாத்திரத்திடத்தில் செலுத்தப்படினும் அதன் முடிவு இவ்வாறுதான் ஆகும் என்பதற்கே தசரதன் எடுத்துக் காட்டாய் விளங்குகிறான். . . வேத முதல்வன் என்று இராவணனாலும் போற்றப் படுகிற இராமனை இவ்வுலகிற் பிறந்து வாழ்ந்து பிறர்க்குப் பயன்படும்ாறு செய்த தசரதன் வாழ்வு இவ்வாறு முடிவுறும் என்று யார் நினைத்திருப்பார்?