பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 0 அ. ச. ஞானசம்பந்தன் மந்திர ஆலோசனையின் பொழுது தனது எதிர்காலம் பற்றி அவன் கண்ட கனவுகள் எங்கே? அறுபதினாயிரம் ஆண்டுகள் இவ்வுலகை ஆட்சி செய்து, பொறி புலன்கட்கு அடிமையாய் இருந்து, அதனால் மனந்தளர்வுற்ற மன்னன் மந்திர சபையில் யாது கூறுகிறான்? வெள்ளநீர் உலகிடை விண்ணில் நாகரில் தள்ளரும் பகைஎலாம் தவிர்த்து கின்றயான் கள்ளரிற் கரந்துஉறை காமம் ஆதியாய் உள்ளுறு பகைவருக்கு ஒதுங்கி வாழ்வதோ ? (1330) எஞ்சலில் மனம்எனும் இழுதை ஏறிய அஞ்சுதேர் வெல்லும்ஈது அருமை ஆவதோ ? (1331) இவ்வுலகிலும், தேவ, நாக உலகங்களிலும் பகையை வென்ற யான், கள்வர் போல என் உள்ளத்துள் ஒளித்து நிற்கும் காமம் முதலிய உட்பகையை வெல்ல வேண்டாவா? மனம் எனும் பேய் ஏறிய ஐந்து பொறிக. ளாகிய தேர்களை வெல்வது அவ்வளவு கடினமா? ஆசை முதலிய அகப்பகைகளை வெல்வது எனக்கு அரியதன்று. எனவே, நான் அம்முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறிய மன்னவன், அவ்வாறு கூறிய இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் அவ்வாசை காரண மாகவே உயிரை விடுகிறான் என்றால், இதனை என்னென்று கூறுவது! - - - ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்; ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்; ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்; ஆசை விடவிட ஆனந்தம் ஆமே (26.15) என்ற திருமூலர் திருவாக்கு மீட்டும் மெய்யாவதைக் &@Tt osts), . . . - - அனைத்து நற்பண்புகட்கும் உறைவிடமாய் விளங்கிய தசரதன், மனைவி மக்கள்மாட்டுக் கொண்ட கழிபெருங்: காதலுக்கே இரையானான்.