பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் துயரும் மன்னன் துயரும் கவிதைக் கலைச்சிறப்பு நுண்கலைகளுள் தலையாய இடம் பெற்ற கவிதைக் கலை, அழகில் ஈடுபட்டு அதனைக் கலையாக மாற்றிப் பிறகும் அனுபவிக்கும் வண்ணம் தரும் இயல்புடையது. கலைகள் அனைத்திற்குமே இவ்விலக்கணம் பொது வானதுதான். ஆதலால், அழகுடைப் பொருள் எதுவாய் இருப்பினும், அதனைப் பயன்படுத்திக் கொள்ளக் கலை தயங்குவதில்லை. ஒவியக் கலையிலும், சிற்பக்கலையிலும் பெண் வடிவம் அதிக இடம் பெற்றதற்கு இதுவும் ஒரு சிறந்த காரணம். . . - - கதிரவன் உதயம், காட்டாற்றின் ஒட்டம், நல்ல நிறஞ்செறிந்த காடு, கருங்கடலின் அலை வீச்சு, ஓங்கி வளர்ந்த மலை முகடு ஆகிய இவற்றின் இயற்கை எழிலில் ஈடுபட்ட கலைஞன், இவற்றில் காணப் பெறும் பல்வேறு பட்ட அழகை வடித்துத் தரும் பொழுது அது "கலை" என்னும் பெயரைப் பெறுகிறது, அக்கலை சிற்பம், ஒவியம்