பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 C அ. ச. ஞானசம்பந்தன் என்பன போன்ற பருப்பொருளை இடைநிலைப் (Medium) பொருளாக உடைய கலையாகவும் முகிழ்க்க லாம்; அன்றேல், ஒலியையே இடைநிலைப் பொருளாக உடைய இசையாகவும் முகிழ்க்கலாம்; அன்றி, சொல்லும் பொருளும் ஒசையுமுடைய கவிதையாகவும் மலரலாம். இடைநிலைப் பொருள் பருப்பொருளாய் இருக்கும் பொழுது கலை சிறப்பதைவிட அது நுண்பொருளாய் இருக்கும் பொழுது மிகுந்த சிறப்பை அடைகின்றது. கலைஞன் கற்பனையின் ஒட்டத்துக்கு ஏற்பக் கல்லும், வண்ணமும் இடந்தாரா அல்லவா? அவற்றின் எல்லை அளவுதான் கலைஞன் செல்லமுடியும். ஆனால், சொல் லையும் பொருளையும் ஓசையையும் அளவாகவுடைய கவிதையில் கலைஞனுடைய சுதந்தரம் மிகுதிப்படுதல் உறுதி. எனவேதான் கலைகளிலெல்லாம் கவிதைக் கலை சிறந்து விளங்குகின்றது. கலைஞன் சிறப்புக் கேற்பக் கலை சிறந்து விளங்கும் என்பது கூறத் தேவையில்லை. கவிதைக் கலைஞர்களுள் தலையிடம் பெறும் மிகச் சிலருள் ஒருவனாகிய கம்ப நாடனின் கடுை) மிகச் சிறந்திருக்கும் என்று எதிர்பார்ப்ப திலும் தவறு இல்லை. அவன் கைப்படாத பொருளே இல்லை என்றுகூடக் கூறிவிடலாம். மேலும், அவன் கைப்பட்டவெல்லாம் பொன்னாக மாறின என்பதிலும் ஐயமில்லை. இரண்டொரு பாடல்களில் காட்சியளித்து மறைகிற தோழி’ போன்ற சிறு பாத்திரங்களிலிருந்து நூல் முழுதும் காட்சியளிக்கும் இராமன் போன்ற பெரும்பாத்திரம் வரை அனைத்தையும் பொன்னாக மாற்றிய பெருமை அவனுடையதே. ஒர் அங்குல உயரமுடைய தந்தத்தில் ஒப்பற்ற வேலைத்திறனைக் காட்டுவதும் கலைதான்; மிகப்பெரிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரம் போன்றவற்றில் வேலைத் திறனைக் காட்டுவதும் கலைதான். இவற்றுள் எது சிறந்தது என்று கேட்டலும் ஆராய்தலும் முறையாகாது.