பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் C 121 கம்பநாடன் தனிப்பெருமை யாதெனில், இவ்விருவகைக் கலையிலும் அவன் வெற்றி கண்டுள்ளதே. இரண்டே பாடல்களில் தோன்றி மறையும் நீலமாலை என்ற தோழியையும், இராமனைப் போலச் சாகாவரம் பெற்றவ ளாக்கி விட்டான். எனவே, இத்தகைய கலைஞனிடம் இருந்து எதனையும் கசாமல் எதிர்பார்க்கலாமன்றோ? கவிதையிற் குழந்தை - அழகுடைப் பொருளையே கலைஞன் கலைக்கு மூலமாக நாடுகிறான் என்று கூறினோம். மக்கட் படைப்பில் பெண் இனம் அழகின் இருப்பிடம். எனவே, கவிதைக் கலைக்கு மூலப்பொருளாகப் பெண் இருக்கிறாள் என்பதும் கண்டோம். பெண்ணை அடுத்து அவ்விடத் திற்கு வரக்கூடிய தகுதியுடைய பொருள் அழகே வடிவான குழந்தை ஒன்றுதான். குழந்தைச் செல்வத்தில் ஈடுபடாத கலைஞனே இல்லை என்று கூறிவிடலாம். அழகே வடிவமான குழந்தை எவ்வாறு கலைஞனைத் தன்னிடம் ஈடுபடுத்தாமல் இருக்க இயலும்? - இம்மை உலகத்து இசையொடும் பொருந்தி மறுமை உலகமும் மறுஇன்று எய்தும் செறுகரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயக்த செம்மலோர் (அகம் 66) என்றும், மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே (புறம் 188) என்றும் சங்கப் புலவர்களால் பாராட்டப்படும் சிறப்புடையது குழந்தைச் செல்வம். பல ஆங்கில நாடகங் களை இயற்றிய ஷேக்ஸ்பியர், தாம் இயற்றிய நாடகங்களில்