பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 0 அ. ச. ஞானசம்பந்தன் குழந்தையைப் பற்றிப் பாட வாய்ப்பில்லாமையால் போலும் ஜான் அரசன் (King John) என்றதொரு நாடகத்தை உண்டாக்கி, அதில் குழந்தைச் செல்வத்தைக் கலையாக்கி மகிழ்கிறான்! தமிழ் இலக்கிய உலகில் சங்க காலந்தொட்டுக் குழந்தை அழகில் ஈடுபடாத கவிஞனே இல்லை என்று கூறிவிடலாம். கடவுளையும் குழந்தை யாக்கி அதிலே ஒர் இன்பங்கண்டவன் அன்றோ தமிழன்? தமிழன் வழிபடும் முருகன், கண்ணன் இருவரும் குழந்தைகள் அல்லரோ? எனவே, குழந்தை இன்பத்தில் ஈடுபடாத மனிதனே இவ்லை என்ற்ால், கலைஞனைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா? கவிதைக் கலையிலும், தமிழ் இலக்கியத்தில் ஒரளவு குழந்தை இடம் பெற்றுளது. இடைக்காலத்தில் காப்பியங்கள் இயற்றிய பெரும்புலவர் அனைவரும் ஒருவர் நீங்கலாகக் குழந்தைச் செல்வத்தில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். குழந்தை பற்றிப் பாட வாய்ப்பே இல்லாத சேக்கிழாரும் ஞானசம்பந்தப் பிள்ளையாருக்குப் பத்துப் பாடல்கள் பாடி மகிழ்கிறார். இன்னும் பிற்காலத்தில் இக்குழந்தை ஒரு நூலுக்கே உரிமையாகிவிட்ட புதுமையும் காணக் கிடக்கிறது. உலகில் உள்ள வேறு எந்த மொழியிலாவது 'பிள்ளைத் தமிழ்' என்றதோர் இலக்கியம் கண்டதுண்டா? "நூறு பாடல்கள் குழந்தையைப் பற்றியே பாடத் துணிந்த தமிழனும் அவன் கலையும் வாழ்க!” என்று வாழ்த்துவது தவிர, வேறு செய்யத்தக்கது யாது? குழந்தை இத்துணை இடம் பெற்ற தமிழ் இலக்கியத்தில் ஒரு நூல் குழந்தை யைப் பற்றிப் பாடாதிருந்தால், அது வியப்பினும் வியப்பன்றோ? அதிலும் பல குழந்தைகளைப் பற்றிக் கூற. வேண்டிய கடப்பாடு இருந்தும், பதினாயிரம் பாடல் கட்கு மேல் உடைய பெருநூலாய் இருந்தும், ஒரு நூல் குழந்தையைப் பற்றிப் பாடவில்லை என்றால், அந்நூல் எது என்று கேட்கத் தூண்டுகிறதல்லவா? அந்நூல் கம்பநாடனது ஒப்புயர்வற்ற இராமாயணந்தான்.