பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 0 123 ஏனோ பாடவில்லை ? தெய்வத் தன்மையுடன் மனிதத் தன்மையும் நிறைந்: திருந்த இராமனைக் குழந்தையாய்ப் பெற்று இருக்கும். பொழுது ஏனோ கம்பநாடன் அதனைப் பயன்படுத்தி விரிவாகப் பாடவில்லை! தசரதன் பல காலம் தவமிருந்து பெற்ற புதல்வர்களை எவ்வாறு போற்றி மகிழ்ந்து கொஞ்சியிருப்பான்? அதுதான் கிடக்கட்டும் என்றாலும், முதல் தேவியாகிய கோசலையும், அவ்விராமனை வளர்த்தி வளாகிய கைகேயியும் அவனைப் பாராட்டியிருக்க மாட்டார்களா? இவைடற்றி ஏனோ கம்பன் ஒரு பாடல் கூடப் பாடவில்லை! இராவணனின் அருமந்த மைந்தி ராகிய இந்திரசித்தன்', 'அட்சயகுமாரன்’ என்பவர் களையும் அவர்கள் குழந்தையாய் இருக்கும் பருவம் குறித்துப் பாடவில்லையே! போகட்டும். காப்பியத் திறனாய்வு செய்பவர்கள் இந்த இடத்திற்கு முற்றிலும் தேவையன்று என்று கூறுவர் என்பது அறிந்திருந்தும், பிரகலாதன் வரலாற்றை உயுத்த காண்டத்தில் பெய்து வைத்திருக்கிறானே! அங்கேயாவது அந்தப் பிரகலாதனைப் பற்றிப் பாடியதுண்டா? - இவை அனைத்தையும் நோக்க, ஒர் எண்ணம் உறுதிப் படுகிறது. இது புலவன் மறந்து விட்டுப்போன பகுதியன்று; வேண்டுமென்றே ஒதுக்கிய பகுதி என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. கலைஞர் அனைவரும் கண்டால் விட விரும்பாத குழந்தைச் செல்வம், கம்பனால் ஒதுக்கப்பட வேண்டிய காரணம் யாதாக இருக்க முடியும்? அவனே நேரில் வந்து அக்காரணத்தைக் கூறினாற்றான் நாம் உறுதியாக அறிய முடியும். அவ்வாறு உறுதியாகக் கூறவியலாவிடினும் ஒரளவு அனுமானத்தால் இதுதான் என்று காரணத்தை நாமே குறிக்கலாம். குழந்தைச் செல்வத்தைப் பெற்று வைத்திருந்து, இடைக் காலத்தில் அக்குழந்தை தமக்குப் பயன்படாமல் போயிருந் தால், பின்னர் வாணாள் முழுவதும் குழந்தையைக்