பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 0 அ. ச. ஞானிசம்பந்தன் கண்டால் பிடிக்காமல் இருப்பவர்கள் இன்றும் உண்டு. பிற குழந்தையைக் காணும் பொழுதெல்லாம் தம் குழந்தை நினைவிற்கு வர, அதனால் தோன்றும் துன்பம் கண்டு, குழந்தைகளையே தம்பால் நெருங்கவிடாமல் இருப்பவர்கள் இன்றும் உண்டு. இத்தகைய ஒரு மனநிலை கம்பனிடத்தும் தோன்றியிருக்குமோ என ஐயப்படுவதில் தவறில்லை. - - - * மகனை இழந்த கம்பனா? 'அம்பிகாபதி என்றொரு மைத்தன் கம்பனுக்கு இருந்தானென்றும் அவன் அரசன் மகள் மேல் கொண்ட காதலால் உயிரை இழக்க நேரிட்டது என்றும் கதை வழங்கி வருதல் நம்முள் பலரும் அறிந்ததே. வேறு ஆதாரம் இல்லாமல் செவிவழிச் செய்தி ஒன்றையே நம்பி வாழும் இக்கதையில் உண்மை நிரம். உண்டு என்பதை இராசாயனத்தை ஒருமுறை கற்றவரும் அறிதல் கூடும். இராமனைப் பிரிய நேரிட்ட தசரதன் வருத்தத் தைக் கவிஞன் ஏறத்தாழ எழுபத்தைந்து பாடல்களால் விரிக்கிறான். அப்பாடல்களையும் அவற்றிற்கு முன்னும் பின்னும் காணப்படும் பாடல்களையும் படித்தால், ஒரு வேறுபாடு நன்கு தெரியும், அரசன் வருத்தத்தைக் கூறும் பாடல்கள் கவிஞனுடைய கவிதை வன்மையால் மட்டும் தோன்றியவை அல்ல. அவை அவனுடைய நெஞ்சைப் விழித்து எடுத்த அவலத்தில் குமிழியிட்டு வெளிவரும் சொந்த அனுபவமே என்பது நன்கு புலப்படும். வயது முதிர்ந்த பருவத்தில், இனி இம்மைந்தன், ர்மக்குக் கொழு கெம்பாவன்!" என்று நினைந்து தந்தை இறுமாத்து இருக்கும் பொழுது மகன் இறக்கிறான்; இன்றேல் பயனற்ற நிலையில் காடு சென்று விடுகிறான். இறக்கும் மைந்தன் கம்பனுடைய செல்வக்குமாரன்; காடு செல்லும் மைத்தன் தசரதனுடைய குமார்ன். கவிஞன் மகன் இறந்ததும் மன்னனது ஆணையால் இராகவன் காடு