பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 125 சென்றதும் சிற்றன்னை ஆணையால், இராமன் காடு செல்வதைத் தசரதன் விரும்பவில்லை. அம்பிகாபதி இறப்பதைக் கவிஞன் விரும்பவில்லை. இராமன் காடு செல்வதை அறிந்தும் அதனைத் தடுக்கும் சத்தியற்றவ னாய்த் தசரதன் புலம்புகிறான். அம்பிகாபதி இறப்பதை அறிந்துவைத்தும், தடுக்க வலிமையற்ற புலவன் புலம்பு கிறான். அன்றியும், தான் தன் மகனிடம் கண்ட அருமைக் குணங்களையும், அன்பையும், அறிவையும் அறநெறி ஒழுக்கையும் கம்பன் இராமனிடமும் காண் கிறான். இவை அனைத்தும் இருவருக்கும் பொதுவாகும். ஆனாலும், கவிஞனுடைய புலம்பலை நாம் நேரே அனுபவிக்க வாய்ப்பு இல்லை. எனவே, தசரதனுட் புகுந்து கம்பன் புலம்புகிறான். இவ்வோர் இடம் மட்டும் கொண்டு இம்முடிபுக்கு வரத் தேவையில்லை. தசரதன் மாண்ட செய்தி கேட்டு அலறும் இராமன் வாக்கினின்றும். தன்னுடைய சோகத்தையே கொட்டுகிறான்; சடாயு, புலம்பலிலும் தன் துயரையே பொழிகிறான். இந்திர சித்தனை இழந்த இராவணன் புலம்பலிலும் மண்டோதரி யின் அரற்றலிலும், காட்டாயோ என்னுடைய கண்மணி யைக் காட்டாயோ!' என்று அழுது அரற்றும் தானமாலை வாக்கினிலும் கம்பனுடைய வாழ்க்கையில் வருத்தம். நிறைந்த நெஞ்சப் பிழிவையே காணுகிறோம். தசரதன் துயரம் தசரதன் துயரைச் சற்று விரிவாகக் காணலாம்: மந்திரசபை முடிந்தவுடன் தசரதன் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருக்கிறான். நீண்ட் நாளாக அவன் கண்டு கொண்டிருந்த கனவு, பொழுது விடிந்தவுடன் நிறைவேறப் போகிறது. 'யாரேனும் அக்கனவு நனவாகாமல் தடுத்து விடுவாரோ!' என்று அவன் அஞ்சிக் கொண்டிருந்தது பொய்யாகிவிட்டது. இன்னும் சில மணி நேரங்களில் முடி சூட்டு விழா நடைபெறப் போகிறது. அது நடை.