பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 O அ. ச. ஞானசம்பந்தன் பெற்று விட்டால், பின்னர் அதனை விரும்பாதவர்களுங் கூட. ஒன்றும் செய்ய இயலாது. நடைபெறு முன்னர் அதனைத் தடுக்கக் கூடியவர் அனைவருக்கும் தக்க வழியில் பாதுகாப்புச் செய்து விட்டான். எனவே, அவன் மகிழ்ச்சிக்குக் காரணம் இருக்கிறது. அரசர்கள் புடை சூழ அவன் இரவு நெடுநேரம் கழித்தே கைகேயியின் கோயில் புகுகிறான். இதுவரை அவளிடமும் அவன் இது பற்றிக் கூறவில்லை. அவன் மகிழ்ச்சிக்கு முழுவதும் எதிராக அங்கே அவன் காதலி படுக்கையிற்கூடக் கிடவாமல் கீழே விழுந்து புரண்டு கொண்டிருக்கிறாள். இந்த வேறுபாடு அவனை மருட்டி விட்டது. எனவே, மானை எடுக்கும் யானை போல, அவன் தன் நீண்ட கைகளால் அவளை அப்படியே வாரி எடுக்கிறான். அவள் விசும்பிக் கொண்டு மீண்டும் கீழே விழுகிறாள். மன்னன் வருத்தம் எல்லை கடந்து விடுகிறது. வருத்தம் அச்சமாக வும் மாறி விடுகிறது. அருமை மனைவி இவ்வாறு இருந்ததை இதற்கு முன்னர் அவன் கண்டதும் இல்லை. எனவே, . . ‘என்னை நிகழ்ந்தது? . இவ்வேழு ஞாலம் வாழ்வார் உன்னை இகழ்ந்தவர் மாள்வார் உற்றது எல்லாம் சொன்னபின் என்செயல் காண்டி; சொல் இது, என்றான் (1499) இது கேட்ட அரசி, பண்டைய இன்று பரிந்து அளித்தி (1500) என்றாள். இதைக் கேட்டவுடன் அரசன் வருத்தம் எல்லாம் பறந்துவிடுகிறது. மீட்டும் மகிழ்ச்சி யில் திளைக்கிறான்; இராமனையும், முடிசூட்டலையும் நினைந்து. எனவே, வெடிசிரிப்புச் சிரிக்கிறான். அவன் மனத்தின் ஆழத்தில், கைகேயி தடை கூறுவாளோ முடிசூட்டு விழாவிற்கு!’ என்று அஞ்சிக் கொண்டிருந்தான் போலும்! ஆனால், அவள் முன்னர்த் தருகிறேன் என்று கூறியதைக் கொடும், என்று கேட்டவுடன் முதலில்