பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 127 அவனது அச்சம் நீங்கிவிடுகிறது. அதனால், ஒரு பெருஞ் சிரிப்புச் சிரித்தான் போலும்! அன்றேல், இத்தகைய சிரிப்புக்கு இங்குக் காரணமே இல்லை. சிரித்துவிட்டுப் பேசுகிறான்: கள் அவிழ் கோதை கருத்துஉண ராத மன்னன் வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான்; 'உள்ளம் உவந்துள செய்வேன்; ஒன்றும் லோபேன்; வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை,' என்றான் (1501) இவ்வாறு மன்னன் கூறலும் கைகேயி, இமையோர் சான்றாக நீர் தந்த வரங்கள் இரண்டையும் தருக, எனக் கேட்க, அரசன், தந்தேன்!” என்று கூறிவிடுகிறான். வரங்கள் யாவை என்று அறிந்தவுடன் அவன் படும்பாடு சொல்லும் தரத்ததன்று. சிங்தை திரிந்து திகைத்து அயர்ந்து வீழ்ந்தான் (1514) 'ஆ கொடி யாய் ' எனும் ஆவிகாலும், 'அந்தோ ! ஓ !கொடி தேஅறம்' என்னும்; உண்மை ஒன்றும் சாக எனாஎழும்; மெய்தள் ளாடி வீழும் (1515) வீரர் அனைவர் வீரத்தையும் விழுங்க வல்ல வெற்றி வேல் மன்னன் கோழைகள் போலப் பேசத் தொடங்கு கிறான்: 'நாரியர் இல்லை.இஞ் ஞாலம் ஏழும் எண்ணக் கூரிய வாள்கொடு கொன்று நீக்கி யானும் பூரியர் எண்ணிடை வீழ்வன்!" என்று பொங்கும் வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் (1516)