பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 O அ. ச. ஞானசம்பந்தன் வெற்றி வீரன் உள்ளமா ? வெற்றி வீரன் ஒருவன் மனத்தில் இத்தகைய எண்ணம் தோன்றுமா? உலகத்தில் உள்ள பெண்டிர் அனைவரையும் வாளால் வீசிக் கொன்றுவிட்டு அருநரகிடை வீழ்ந்து கிடக்கவும் முற்படுகிறான். இப்படி ஒரு வீரன் பேசுவ தென்றால், அவன் மனம் எவ்வளவு கெட்டுவிட்டது என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டும் வேண்டுமா? எல்லையற்ற வருத்தமே தசரதனை இவ்வாறு நினைக்கவும் பேசவும் தூண்டுகிறது. w இதனையடுத்துத் தசரதன் மனநிலை கணந்தோறும் மாறுபடுகிறது. அம்மாறுபாட்டுக்கேற்ப, அவன் ஒரு முறை அவளைக் கெஞ்சுகிறான். உய்யேன் நங்காய்! உன் அபயம் என் உயிர்!’ என்கிறான் ஒருமுறை; (1527). அடுத்த கணத்தில், இன்றோர் காறும் எல்வளை யார்தம் இறையோரைக் கொன்றார் இல்லை! கொல்லுதி யோங் கொடியாளே! (1531). என்று அவளை ஏசுகிறான்; அடுத்த கணத்தில், விண்ணோர் காறும் வென்ற எனக்குஎன் மனைவாழும் பெண்ணால் வந்தது அந்தரம் என்னப் பெறுகேனோ? - (1534). என்று தன்னிரக்கம் கொள்கிறான். ஒரு மனிதன் செய்யத் தகாதன காரியங்களுள் தலையாயது: 'தன்னிரக்கம்'தான். எற்றுஎன்று இரங்குவ செய்யற்க; செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று - * ... .o. என்ற குறளும் இக்கருத்தை வலியுறுத்தவே தோன்றிற்று. சம்பராசுரனை வெற்றி கண்டி தசரதனா இவ்வாறு மாறி விட்டான்? இத்துணைப் பெரிய அவன் வீழ்ச்சியடையக்.