பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 129 காரணம் யாது? எத்துணைப் பெரிய இழிவு வந்துற். றாலும் மனிதன் தன் நிலை குலையாமல் இருப்பதன்றோ மனிதத் தன்மை? - . மலையே வந்து வீழினும் மனிதர்கள்! நிலையி னின்று கலங்கப் பெறுதிரேல் (பொது, தனிக்குறுந்தொகை, 5) என்று திருநாவுக்கரசர் பெருமான் கூறியதும், இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்துணர்வது அஃதொப்பது இல் (குறள் 621) என்று குறளாசிரியர் கூறியதும் தசரதனைப் பொறுத்த வரையிற் பொய்யாகி விட்டனவே! இந்த அளவுடன் அவன் நிற்கவும் இல்லை; சாதாரண மக்கள் நிலைமைக்கு இழிந்து விடுகிறான்; தன் மனைவி என்றும் பாராமல், 'உன் அறுபட்ட தாலிக்கயிறு உன் மகன் மங்கல நானாகப் பயன் படட்டும்!' என்றும் கூறத் தொடங்கி விட்டான். . பழிக்கு நாணாய் மாணாப் பாவி! இனிஎன் பல?உன் கழுத்தில் நாண்உன் மகற்குக் காப்பு காணாம் என்னா -- (1653) அவன் கூறும்பொழுது கைகேயியின் மீது அவனுக்கு ஏற்பட்ட கோபத்தைவிட இராமன்மீது கொண்ட பாசத்தின் ஆழத்தை, உறுதியையே நாம் காண்கிறோம். வேந்தன் புலம்பல் கைகேயியிடம் தனியே இருக்கின்ற வரை அரசனுக்கு வாய்விட்டு அழவும் விருப்பமில்லை. இந்நிலையில் கோசலையும் வசிட்டனும் வந்துற்றனர். வசிட்டனே க- 9