பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 0 131 பொற்றேர் அரசே ! தமியேன் புகழே ! உயிரை ! உன்னை, பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன்! என்றான் (1665) இத்தகைய இடங்களை வாய்விட்டு உரக்கப் படித்துப் பார்த்தாற்றான் இக்கவிதைகளின் உணர்ச்சிப் பெருக்கில் ஈடுபட முடியும். தசரதனுள் நுழைந்துகொண்டு கம்பன்ே அம்பிகாபதியை நினைந்து இப்படி பிரலாபிக்கிறான் என்பது தோற்றவில்லையா? இன்னும் ஒரு வகை மனநிலையையும் கவிஞன் இப் பாடல்களிற் பெய்து வைக்கிறான். சிறந்த நிலைமையில் இருந்தவர்கள் திடீரென்று அந்நிலை கெட்டு அழிவதானால், அவர்கள்மாட்டு அன்புடையவர்கள் இப்புது நிலையைப் பார்க்க விரும்ப மாட்டார்கள். நல்ல நிலையில் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் அடிபட்டுக் கொடுமையான முறையில் இறந்துபட்டால், தாய்மார் போன்றவர்கள் அதனைக் காணச் சகியார்கள், இதுவும் உலகியலே. இம்மனநிலையையும் தசரதன் மாட்டு ஏற்றிக் கூறுகிறான் கவிஞன். முடி சூட வந்த இராகவன் சீரை புனைந்து காடு செல்ல முன் வந்த கோலத்தைக் காண எந்த அன்புடைய தந்தைக்குத்தான் மனம் வரும்? கட்டழகனாய் இருந்த அம்பிகாபதி, கதைகள் கூறுவது போல வெட்டுண்டு இறந்திருந்தால், எவ்வளவுதான் தத்துவம் உணர்ந்த கவிஞனாயினும் இக்கொடுமையைக் காணச் சகிக்குமா? இத்தகைய மனநிலை இதோ பேசப் படுகிறது: . . . . . . . . . . . . தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றிப் புகுதக் கண்ட கண்ணால் போகக் காணேன்! என்றான் "பூனார் அணியும் முடியும் பொன் ஆசனமும் குடையும் சேனார் மார்பும் திருவும் தெரியக் காணக் கடவேன்,