பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 அ. ச. ஞானசம்பந்தன்

கம்பன் படைத்த கனவுலகு

இனி, அக்கவிஞர்பிரான் ஏனையார் போல வெறும் நாட்டு வளம் கூறத் தொடங்காமல், கோசலநாட்டு வருணனை என்ற பெயரில் ஒரு கனவு உலகத்தையே உண்டாக்கி விடுகிறான். அவன் கண்ட கனவுலகைச் சற்றுக் காண்போம்!

கோசல நாட்டைப் பல படியாக வருணிக்கத் தொடங்குகிறான் கவிஞன். ஒரு கட்டடத்தைத் துரத்திலிருந்து பார்க்கிறோம். அதன் முழு வடிவமும் அழகும் கண்ணிற்படுகின்றன. அவற்றை அனுபவித்த பின்னர் இன்னும் அருகிற் சென்று பார்க்கிறோம். அக்கட்டடம் எத்தகைய கற்களால் எவ்வாறு ஆக்கப்பெற்றது என்பதையும், தனிப்பட்ட அறைகள் முதலியவற்றின் சிறப்பையும் உள் நுழைந்து காண்கிறோம். கம்பன் கட்டிய கவிதைக் கோவிலையும் அவ்வாறேகாண்டல் வேண்டும். கோசல நாட்டை அவன் வருணித்துள்ள முறையைத் துாரத்தே இருந்து காணும்பொழுது என்ன உணர்வு உண்டாகும்? ஓர் அரசன் கொலுவீற்றிருக்கும் சிறப்பைக் கண்டால் என்ன மகிழ்ச்சி உண்டாகுமோ, அதே மகிழ்ச்சி உண்டாகக் காண்கிறோம். நாட்டுப் படலம் தொடங்கி மூன்று பாடல்கள் ஆனவுடன் இக்கொலுக் காட்சி வருகிறது. கோசல நாட்டில் மருதமாகிய விளை நிலமே மிகுதி. விளை நிலமிருந்தும், நீர் வசதி முதலியன இல்லையாயின் பயன் இல்லை. எனவே, அனைத்தும் சிறந்து விளையும் நிலங்களாக உள்ளன. ஆகலின், அந்நாட்டில் மருதம் என்னும் அரசி கொலுவீற்றிருப்பது போன்ற, எண்ணம் நம் மனத்தில் தோன்றுகிறது.

மருதக் கொலு

அத்தாணி மண்டபத்தில் கொலுவில் அரசி வீற்று இருப்பதானால், நல்ல இசையும் நாட்டியமும் இல்லாது