பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 0 அ. ச. ஞானசம்பந்தன் மாணா மரவற் கலையும் மானின் தோலும் அவைதான் காணாது ஒழிந்தேன் நன்றாய்த்து அன்றோ கன்றே என்றான் (1664, 1670} காரணம் இதுவே போலும் மேலே கூறிய பாடல்களில் கதைப்போக்கிற்கு ஏற்ற படி தசரதன் புலம்புகிறான். எனினும், அப்புலம்பலின் ஆழத்தில் கவிஞனின் அவலக் குரலேதான் கேட்கிறது. இதிலிருந்து சற்றும் எதிர்பாராத ஒர் உண்மை புலப்படு கிறது. மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் கைகேயியைக் கற்புக் கரசியாகவும், கருணைக் கடலாகவும் பேசிய அக்கம்ப நாடனே கைகேயி சூழ்வினைப் படலத்தில் அளவு மீறி அவளை ஏ.சி.வெறுப்பதன் காரணமும் ஒருவாறு விளங்கு கிறது. முதலில் கைகேயி என்னும் பாத்திரத்தை உண்டாக்கி அதன் பண்பாட்டில் ஈடுபட்டு அவளைப் புகழ்கிறான் கவிஞன். ஆனால், பிற்பகுதியை பாடிக் கொண்டு செல்கையில் அவனையும் அறியாமல் மகனை இழந்த தந்தையின் துயரத்தில் கவிஞன் தன் சுயசரிதையைக் காண்கிறான். தன்னைப் போலவே தசரதனும் வருந்துகிறான் என்பதைக் கவிஞன் உணரத் தலைப்பட்டவுடன் அவ்வுணர்ச்சி அவனையும் மீறி எழுகிறது. அவன் படைத்த பாத்திரங்களைச் செயல் செய்ய ஏவுவதை விட்டு, அவன் அவர்கள் உணர்ச்சியைப் பங்கிட வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். இந்நிலையில் தசரதனுக்குத் தந்தை அன்பு குறுக்கிடுகிறது. அவ்வன்பு இராமனிடம் செல்ல முடியாமல் தடுப்பவள் கைகேயிதானே? எனவே, அவளை அவன் முறை திறம்பி யும் ஏச முடிகிறது. தசரதன் மனநிலையை இப்பொழுது கவிஞனும் பெற்றுள்ளான். அம்பிகாபதியிடம் அவன் அன்பு செல்ல வொட்டாமல் தடை செய்த மன்னன் மேல் வெறுப்பு முற்றுகிறது. அரசன்மேல் குற்றம் இல்லை;